பதிவு செய்த நாள்
11 மார்2016
13:00
மும்பை : இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாருதி கார் மாடல்களின் வரிசையில் மாருதி விடரா பிரீஸா அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கார் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட முதல் நாளிலேயே 2600க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். வாடிக்கையாளர்களிடம் கிடைத்துள்ள இந்த வரவேற்பு மாருதி நிறுவனத்திற்கு கூடுதல் உத்வேகத்தை அளித்துள்ளது. இந்த காரில் மக்கள் விரும்பும் வகையிலான அனைத்து வசதிகளும் உள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாருதி விடரா பிரீஸா, 1.3 லிட்டர் டிடிஐஎஸ் 200 டீசல் இன்ஜின் கொண்டது. இது 5 ஸ்பீடு கியர்பாக்சுடன் இணைக்கப்பட்டுள்ளது. குறைந்த எடை கொண்டதாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு 24.3 கி.மீ., செலலும் திறன் கொண்டது. வரைபட வசதி, தானாக இயங்கும் முன்புற விளக்குகள், ஆட்டோ வைப்பர்கள், ப்ளூடூத் வசதி கொண்ட ஆடியோ சிஸ்டம், டிரைவர் ஏர்பேக், அதிநவீன திறன் கொண்ட கதவுகள், இடவசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|