பதிவு செய்த நாள்
11 மார்2016
14:04
புதுடில்லி : சுசுகியின் புதிய மாடல் பைக்கான சுசுகி அசஸ் 125, மார்ச் 15ல் அறிமுகம் செய்து வைக்கப்பட உள்ளது. தற்போது 125 சிசி ஸ்கூட்டர் விற்பனை சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா 125 தான் முன்னணியில் உள்ளது. இதற்கு போட்டியாக, இளைஞர்களை கவரும் வகையில் இந்த புதிய மாடலை சுசுகி அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மாடலை துவக்கத்தில் முந்தைய மாடல் பைக்குடன் இணைத்தும், பின்னர் தனியாகவும் விற்பனை செய்ய சுசுகி திட்டமிட்டுள்ளது.
சுசுகி அசஸ் 125 பைக் 120 எம்எம் டிரம் பிரேக் கொண்டது. இந்த பைக் தற்போது கருப்பு, வெள்ளை, சிவப்பு, சில்வர், கிரே ஆகிய 5 நிறங்களில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த பைக்கில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல் பைக், முந்தைய மாடலை விட எடை குறைவானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|