பதிவு செய்த நாள்
14 மார்2016
00:45
இ- – காமர்ஸ் யுகத்தில், நாட்டில் உள்ள பெண் தொழில்முனைவோருக்கு, ‘டிஜிட்டல் மார்க்கெட்டிங்’கில் உதவும் வகையில், மஹிலா இ ஹாட் (http://mahilaehaat-rmk.gov.in/index.php) இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. இணையம் மூலம் பொருட்களை விற்பனை செய்வதற்கான இந்த தளம் மூலம் பெண் தொழில்முனைவோர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், தங்கள் பொருட்களை சந்தைப்படுத்தலாம். முதற்கட்டமாக இதில் கட்டணமில்லாமல் இலவசமாக, பெண்கள் தங்கள் பொருட்களை விற்பனைக்கு பட்டியலிடலாம். இந்த இணையதளம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. ஆடைகள், நகைகள், கூடைகள், கம்பளங்கள், மளிகை, அலங்காரப் பொருட்கள் மற்றும் கோப்புகள் என, பல பிரிவுகளின் கீழ் இதில் பொருட்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. இந்தத் தளம், விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு இடையே பாலமாக அமைகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|