நுழைவு வரி விவகாரம்; ஒடிசா அரசுக்கு சாதகம்; பல ஆயிரம் கோடி கிடைக்கும்நுழைவு வரி விவகாரம்; ஒடிசா அரசுக்கு சாதகம்; பல ஆயிரம் கோடி கிடைக்கும் ... ஹங்­கே­ரியில் அப்­பல்லோ டயர் ஆள் கிடைக்­காமல் தவிப்பு ஹங்­கே­ரியில் அப்­பல்லோ டயர் ஆள் கிடைக்­காமல் தவிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வரு­மா­னத்தை பர­வ­லாக்­குங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2016
00:50

முத­லீட்டை பர­வ­லாக்க வேண்டும் என்று சொல்­லப்­ப­டு­வதை, நிதி உலகில் அடிக்­கடி கேட்­கலாம். முத­லீடு செய்யும் தொகையை ஒரே வகை­யான நிதி சாத­னத்தில் போட்டு வைக்­காமல், பல­வற்றில் பிரித்து முத­லீடு செய்ய வேண்டும். இதே போல வரு­மான பர­வ­லாக்­கலும் தேவை என்று சொல்­லப்­ப­டு­வது உங்­க­ளுக்குத் தெரி­யுமா? அதா­வது, ஒரே ஒரு வரு­மா­னத்தை (சம்­பளம்) மட்டும் நம்­பி­யி­ருக்­காமல், வேறு வருவாய் ஆதா­ரங்­க­ளையும் தேடிக்­கொள்ள வேண்டும். வர்த்­தக நிறு­வ­னங்கள் எப்­படி ஒரே ஒரு வாடிக்­கை­யா­ளரை மட்டும் நம்­பி­யி­ருப்­பது ஆபத்­தா­னதோ அது போலவே ஒற்றை வரு­மா­னத்தை சார்ந்­தி­ருப்­பதும் ஆபத்­தா­னதே. எனவே தான், கூடுதல் வரு­மானம் வரும் வழி­களை தேடிக்­கொள்ள வேண்டும். அது பகு­தி­நேர பணி­யா­கவும் இருக்­கலாம்; திறன் சார்ந்த ஆலோ­சனை சேவை­யா­கவும் இருக்­கலாம்.
உங்களுக்கான ‘பேலன்ஸ் ஷீட்’வர்த்­தக நிறு­வ­னங்­களின் நிதி ஆரோக்­கி­யத்தை, ‘பேலன்ஸ் ஷீட்’ கொண்டு அறி­யலாம். நிறு­வ­னங்கள் மட்டும் தான் என்­றில்­லாமல், தனி­ந­பர்­களும் கூட தங்கள் வரவு – செல­வுக்­கான பேலன்ஸ் ஷீட்டை உரு­வாக்கிக் கொள்ள முடியும். இதை எப்­படி செய்­வது மற்றும் அதனால் என்ன பலன் என்று பார்க்­கலாம்!
வரவும் செலவும் நிறு­வ­னங்­க­ளுக்­கான பேலன்ஸ் ஷீட் சிக்­க­லா­னது. நிறு­வன சொத்­துக்கள், கடன் பொறுப்­புகள் மற்றும் பங்­கு­தா­ரர்­களின் சம­பங்கு நிலை ஆகி­ய­வற்றை தெரி­விக்கும் நிதி அறிக்­கை­யாக அது அமை­கி­றது. ஆனால், உங்­க­ளுக்­கான பேலன்ஸ் ஷீட் எளி­தாக இருந்தால் போது­மா­னது. ஒரு பக்கம் சொத்­துக்கள், இன்­னொரு பக்கம், கடன் பொறுப்­பு­களை கொண்­ட­தாக இருந்­தாலே போதும்.
வரு­மான அறிக்கைமுதலில் உங்­க­ளுக்­கான வரு­மான அறிக்­கையை தயார் செய்ய வேண்டும். அதற்கு வரு­மா­னத்தை குறித்து வைப்­ப­தோடு, செல­வு­க­ளையும் குறித்து வைக்க வேண்டும். மளிகை செலவு, கிரடிட் கார்டு பயன்­பாடு, பில் தொகைகள் என, எல்­லா­வற்­றையும் குறித்து வையுங்கள். இப்­படி செய்யும் போதே, எதற்­காக எல்லாம் அதிகம் செல­வா­கி­றது என தெரிந்­து­விடும். ஒரு காகி­தத்தில் இரண்டு கட்டம் போட்டு ஒரு பக்கம் வரு­மானம், அதற்கு அருகே உள்ள கட்­டத்தில் செல­வு­களை இடம்­பெறச் செய்தால் வருவாய் அறிக்கை தயார்.
கடன் பொறுப்­புகள்வரு­மான அறிக்­கையில் பார்த்தால் அனேக செல­வுகள், வரிகள், வாடகை, உணவு, போக்­கு­வ­ரத்து, வீட்­டுச்­செ­லவு ஆகிய பிரி­வு­களின் கீழ் அமைந்­தி­ருக்­கலாம். வீட்­டுக்­கடன் அல்­லது வாக­னக்­கடன் வாங்­கி­யி­ருந்தால் அவை கடன்­பொ­றுப்­பு­களின் கீழ் வரும். ரியல் எஸ்டேட், பத்­தி­ரங்கள், தங்கம் போன்­ற­வற்றில் முத­லீடு செய்­தி­ருந்தால் அவை சொத்­துக்­களின் கீழ் வரும்.
நிகர மதிப்பு என்ன?வரு­மான அறிக்கை போலவே ஒரு காகி­தத்தில் இரண்டு கட்­டங்­க­ளாக பிரித்து ஒரு பக்கம் சொத்­துக்­க­ளையும், மறு­பக்­கத்தில் கடன் பொறுப்­பு­க­ளையும் குறிப்­பி­டவும். கடன் பொறுப்­பு­களை விட சொத்­துக்கள் மற்றும் முத­லீட்டின் பலன் அதி­க­மாக இருந்தால், அது தான் உங்கள் நிகர மதிப்பு. பொது­வாக ஏழை­க­ளுக்கும் செல்­வந்­தர்­களுக்­க­மான வித்­தி­யாசம், கடன் பொறுப்­புகள் மற்றும் சொத்­துக்­களில் இருப்­பதை பார்க்­கலாம். ஏழை­களின் செல­வுகள், முத­லீடு மற்றும் சொத்து உரு­வாக்­கத்தில் குறை­வாக இருக்­கி­றது. நடுத்­தர மக்­களைப் பொருத்­த­வரை செல­வு­களில் ஒரு பகுதி, சொத்­தாக மாறக்­கூ­டிய வீட்­டுக்­கடன், வாக­னக்­கடன் போன்­ற­வை­யாக இருக்­கி­றது.
கூடுதல் வருவாய்செல்­வந்­தர்கள் தங்கள் செல­வு­களின் கணி­ச­மான பகு­தியை, சொத்­துக்கள் அல்­லது முத­லீட்டு சாத­னங்­களில் முத­லீடு செய்­கின்­றனர். இவை பேலன்ஸ் ஷீட்டில் சொத்­தாக மாறு­வ­துடன், அவற்றின் மூலம் வரும் வட்டி அல்­லது ஊக்­கத்­தொகை போன்ற பலன், மாத வரு­மா­னத்­து­டனும் சேர்­கி­றது. ஆக உங்கள் பேலன்ஸ் ஷீட்டும் இப்­படி இருந்தால், நீங்­களும் செல்­வந்­த­ரா­கலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)