பதிவு செய்த நாள்
14 மார்2016
01:05

புதுடில்லி : மும்பை பங்கு சந்தை, பங்கு வெளியீட்டில் இறங்க, பங்கு சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, ‘செபி’ ஒப்புதல் அளித்துள்ளது.
இதை, ‘செபி’ தலைவர், யு.கே.சின்ஹா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: மும்பை பங்கு சந்தை, பங்குகளை வெளியிட்டு நிதி திரட்டிக் கொள்வதற்காக, கடந்த ஜனவரியில் விண்ணப்பித்தது. அத்துடன், ‘செபி’ விதிமுறைகளின்படி, உரிய ஆவணங்களும் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றை பரிசீலித்த பின், பங்கு வெளியீட்டிற்கு, கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பங்கு வெளியீட்டிற்கு பின், மும்பை பங்கு சந்தையின் பங்குகள், தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்படும். ஆனால், இவ்வாறு பட்டியலிடப்படுவதற்கு, தேசிய பங்கு சந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ‘இருந்தபோதிலும், ‘செபி’யின் புதிய விதிமுறைப்படி, அச்சந்தையில், பங்குகள் பட்டியலிடப்படும்’ என, பங்கு சந்தை வல்லுனர் ஒருவர் தெரிவித்தார். மும்பை பங்கு சந்தை, பங்கு வெளியீட்டிற்கான முதன்மை வர்த்தக வங்கியாக, ஏற்கனவே எடல்வைஸ் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தை நியமித்துள்ளது.மேலும், சட்ட ஆலோசனைக்கு, ஏ.இசட்.பி., அண்டு பார்ட்னர்ஸ் மற்றும், நிதிஷ்தேசாய் அசோசியேட்ஸ் நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
முதன் முதலாக...பங்கு சந்தை முதலீட்டாளர்கள், நீண்ட காலமாக, மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளும், பங்கு வெளியீட்டில் இறங்கி, பங்குகளை பரஸ்பரம் பங்கு சந்தையில் பட்டியலிட வேண்டும் என, வற்புறுத்தி வருகின்றனர். இந்த வேண்டுகோளை ஏற்று, முதன் முதலாக, மும்பை பங்கு சந்தை, ‘செபி’யின் முறையான அனுமதியை பெற்று, பங்கு வெளியீட்டில் இறங்க உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|