பதிவு செய்த நாள்
14 மார்2016
01:06

புதுடில்லி : ‘‘இந்தியாவின் பொருளாதார எழுச்சி, ஒரே சீராக இல்லாமல், ஏற்றத் தாழ்வுடன் உள்ளது,’’ என, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
ஏமாற்றம் அளிக்கிறது :அவர் செய்தியாளர்களிடம் மேலும் பேசியதாவது: தொடர்ந்து, மூன்றாவது மாதமாக, கடந்த ஜனவரியில், தொழில்துறை உற்பத்தி குறியீடு குறைந்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு வருகிறது. ஆனால், அந்த வளர்ச்சி, ஏற்றத் தாழ்வுடன் உள்ளது. அதனால் அதை, வலுவான, நிலைத்த வளர்ச்சி என, கூற முடியாது. மத்திய அரசு, நிதிப் பற்றாக்குறை இலக்கை, 3.5 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இது சாத்தியம் என்றே, ரிசர்வ் வங்கியும், நிதிச் சந்தைகளும் கருதுகின்றன. அதன் அடிப்படையில், வரும், ஏப்ரல், 5ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட உள்ள நிதிக் கொள்கை இருக்குமா என்பதை இப்போதே கூற முடியாது. ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, அன்றைய தினம்தான் தெரிவிக்கப்படும்.
குழு முடிவெடுக்கும் :நிதிப் பற்றாக்குறையை, தற்போது மதிப்பிடுவது போலன்றி, சுழற்சி முறையில் மதிப்பிடலாம் என, யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இது குறித்து ஆராய, குழு நியமிக்கப்பட உள்ளது. இக்குழு, நிதிப் பற்றாக்குறை மதிப்பீடு குறித்து முடிவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|