பதிவு செய்த நாள்
14 மார்2016
14:02

புதுடில்லி : நாட்டின் மொத்த பணவீக்கம் தொடர்ந்து 16வது மாதமாக சரிவை சந்தித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட பிப்ரவரி மாதத்திற்கான மொத்த விலை குறியீட்டு பணவீக்கம் (-) 0.91 சதவீதமாக சரிவடைந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் உணவுப் பொருட்கள் குறிப்பாக காய்கறிகள், பருப்பு வகைகளின் விலை சரிவடைந்ததன் காரணமாக பணவீக்கம் சரிவடைந்துள்ளது. ஜனவரி மாதத்தில் பணவீக்கம் (-) 0.90 சதவீதமாக இருந்தது.
ஜனவரி மாதத்தில் 6.02 சதவீதமாக இருந்த உணவுப் பொருள் பணவீக்கம், பிப்ரவரி மாதத்தில் 3.35 சதவீதமாக சரிவடைந்துள்ளது. பருப்பு வகைகளின் பணவீக்கம் 38.84 சதவீதமாகவும், வெங்காய பணவீக்கம் (-)13.22 சதவீதமாகவும் உள்ளன. காய்கறிகளின் விலை (-) 3.34 சதவீதமும், பழங்களின் விலை (-) 1.95 சதவீதமும் உயர்ந்துள்ளது. குறிப்பாக உருளைக்கிழங்கின் விலை (-) 6.238 சதவீதமும், முட்டை, இறைச்சி மற்றும் மீன் வகைகள் 3.47 சதவீதமும் உயர்ந்துள்ளன. எரிபொருள் மற்றும் மின் துறை பணவீக்கம் (-) 6.40 சதவீதமாகவும், உற்பத்தி பொருள்களுக்கான பணவீக்கம் (-) 0.58 சதவீதமாகவும் உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|