பதிவு செய்த நாள்
14 மார்2016
16:12

மும்பை : நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்ட இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடனேயே நிறைவடைந்துள்ளன. இன்றைய வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 86.29 புள்ளிகள் உயர்ந்து 24,804.28 புள்ளிகளாகவும், நிப்டி 28.55 புள்ளிகள் அதிகரித்து 7538.75 புள்ளிகளாகவும் இருந்தன.
1311 பங்குகள் ஏற்றத்துடனும், 1339 பங்குகள் சரிவுடனும், 162 பங்குள் மாற்றமின்றியும் காணப்படுகின்றன. ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், ஹிண்டல்கோ, ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிக லாபம் ஈட்டின. அதே சமயம், கோல் இந்தியா, எம் அண்ட் எம், டிசிஎஸ், எல் அண்ட் டி உள்ளிட்ட நிறுவன பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. ஆசிய பங்குச் சந்தைகளும், சர்வதேச பங்குச் சந்தைகளும் ஏற்றத்துடன் காணப்பட்டது இந்திய சந்தைகளின் ஏற்றத்திற்கு காரணமாக அமைந்ததாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|