பதிவு செய்த நாள்
14 மார்2016
23:33
மும்பை : சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த, பிரீமியம் மற்றும் ஆடம்பர சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான, ‘ஸ்காட் எஸ்ஏ’ நிறுவனம், இந்தியாவில் கால் பதிக்க வருகிறது.இந்தியாவில் பிரீமியம் மற்றும் ஆடம்பர சைக்கிளுக்கான சந்தை இருப்பதால், வெளிநாட்டிலிருந்து சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்கள், இந்தியாவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்திருக்கின்றன.அண்மையில், ஆடம்பர சைக்கிள் பிரிவில், இந்தியாவைச் சேர்ந்த ‘டிஐ’ சைக்கிள் நிறுவனத்துடன் இணைந்து, பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ரிட்லி களமிறங்கியது. இப்போது, ஸ்காட் வருகிறது. ‘அடுத்த ஆண்டுக்குள், இந்தியாவில் ஐந்து தொழில்நுட்ப மையங்களை அமைக்க இருக்கிறோம். சிறந்த தொழில்நுட்ப தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சிறப்பான அனுபவத்தை தர இருக்கிறோம்’ என்கிறது, ஸ்காட் ஸ்போர்ட்ஸ் இந்தியா நிறுவனம். ஸ்காட் சைக்கிள் விலை, 28 ஆயிரம் முதல், 8 லட்சம் ரூபாய் வரை இருக்கும்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|