பதிவு செய்த நாள்
14 மார்2016
23:37

நியூயார்க் : அமெரிக்காவில், பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் சிக்கிய, இந்தியரான ரஜத் குப்தா, இரண்டு ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின், விடுதலையானார். ‘கோல்டுமேன் சாக்ஸ்’ நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர், ரஜத் குப்தா. இவர், நிறுவனத்தின் இயக்குனர் குழு எடுத்த ரகசிய முடிவுகளை, ராஜ் ராஜரத்தினம் என்ற, பங்கு வர்த்தகருக்கு தெரிவித்து வந்துள்ளார்.இந்த தகவலின் அடிப்படையில், ராஜ் ராஜரத்தினம், கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனப் பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தி, கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளார். இந்த முறைகேடு தொடர்பாக, 2012ல், ரஜத் குப்தா மீது, அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ரஜத் குப்தாவுக்கு, இரண்டாண்டுகள் சிறை தண்டனையும், 1.9 கோடி டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. அதன்படி, 2014 முதல் சீர்திருத்தச் சிறையில் இருந்த ரஜத் குப்தா, இரு மாதங்களுக்கு முன் விடுவிக்கப்பட்டு, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த, 11ம் தேதியுடன் அவரின் தண்டனை காலம் முடிந்ததை அடுத்து, அவர் வீட்டுச் சிறையில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|