‘ரிலையன்ஸ் ஜியோ’ வரவு: போட்­டி­யா­ளர்­க­ளுக்கு செலவு‘ரிலையன்ஸ் ஜியோ’ வரவு: போட்­டி­யா­ளர்­க­ளுக்கு செலவு ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.26 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.26 ...
தயா­ரிப்பு துறை; அறி­வித்­த­படி முத­லீடு குவி­ய­வில்லை; தாம­தத்தால் அஞ்சும் முத­லீட்­டா­ளர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2016
23:47

புது­டில்லி : நாடு தழு­விய அளவில், தயா­ரிப்பு துறையில் அறி­விக்­கப்­பட்ட திட்­டங்­களில், 11 சத­வீத அள­விற்கே முத­லீடு குவிந்­துள்­ள­தாக, ‘அசோசெம்’ அமைப்பின் ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
அதன் விவரம்: இந்­தி­யாவில், தயா­ரிப்பு துறையில், 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்­பி­லான திட்­டங்கள் அறி­விக்­கப்­பட்டு உள்­ளன. ஆனால், 2015 செப்­டம்பர் நில­வ­ரப்­படி, 1.60 லட்சம் கோடி ரூபாய் அள­வி­லான திட்டப் பணிகள் மட்­டுமே துவங்­கி­யுள்­ளன. மொத்தம் அறி­விக்­கப்­பட்ட, 1,160 திட்­டங்­களில், 9 லட்சம் கோடி ரூபாய் மதிப்­பி­லான, 422 திட்டப் பணிகள் தாம­த­மாக நடை­பெற்று வரு­கின்­றன. அவற்றில், 80 திட்­டங்கள் மூல­மாக மட்டும், 4.50 லட்சம் வேலை­வாய்ப்­புகள் உரு­வாகும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.
திட்­ட­மி­டு­வதில் குறை­பாடு, நிதிப் பற்­றாக்­குறை, ஒப்­பந்­த­தா­ரர்­க­ளிடம் ஒருங்­கி­ணைப்பு இல்­லா­த­தது உள்­ளிட்ட கார­ணங்­களால், திட்டப் பணி­களில் தாமதம் ஏற்­ப­டு­கி­றது. இதனால், திட்டச் லவும், மதிப்­பீட்டை விட அதி­க­ரிக்­கி­றது. இது­போன்ற கால­தா­மத திட்­டங்­களில் மேலும் முத­லீடு செய்ய, முத­லீட்­டா­ளர்கள் அஞ்­சு­கின்­றனர்.தயா­ரிப்பு துறையை பொறுத்­த­வரை, ராஜஸ்தான் மாநி­லத்தில், 68 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மான திட்­டங்கள், இன்னும் செயல்­பாட்­டிற்கு வராமல் உள்­ளன. அடுத்த இடங்­களில், ஹரி­யானா, 67.5 சத­வீதம்; பீஹார், 63 சத­வீதம்; அசாம், உ.பி., 62 சத­வீதம் ஆகிய மாநி­லங்கள் உள்­ளன.
கால­தா­மதம் கார­ண­மாக, செல­வி­னங்கள் அதி­க­ரித்­துள்ள திட்­டங்­களில், ஒடிசா, 31 சத­வீத பங்­க­ளிப்­புடன் முத­லி­டத்தில் உள்­ளது. கர்­நா­டகா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் ஆகிய மாநி­லங்கள், தலா, 9 சத­வீத பங்­க­ளிப்­புடன், அடுத்த இடங்­களில் உள்­ளன.தடை­பட்­டுள்ள திட்­டங்­களை, முன்­னு­ரிமை அடிப்­ப­டையில் முடுக்கி விடவும், நிர்­ண­யித்த இலக்­கின்­படி திட்­டங்­களை முடிக்­கவும், மத்­திய அரசு, தனித்­திட்­டத்தை உரு­வாக்க வேண்டும். இது, தயா­ரிப்பு துறைக்கு உத்­வேகம் கொடுத்து, அதி­க­ளவில் முத­லீ­டு­களை ஈர்க்க துணை­பு­ரியும். இவ்­வாறு அதில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
ஒடிசா முத­லிடம்கடந்த, 2015 செப்­டம்பர் நில­வ­ரப்­படி, தயா­ரிப்பு துறையில் குவிந்த முத­லீ­டு­களில், ஒடிசா முத­லி­டத்தை பிடித்­துள்­ளது. அடுத்த இடங்­களில், குஜராத், ஜார்க்கண்ட், சத்­தீஸ்கர் ஆகிய மாநி­லங்கள் உள்­ளன.
கூடுதல் செலவுதயா­ரிப்பு துறையில், கால­தா­மதம் கார­ண­மாக திட்டச் செல­வினம், மதிப்­பீட்டை விட அதி­க­ரிக்­கி­றது. இந்த வகையில் உருக்கு சார்ந்த திட்­டங்­களில், அதி­க­பட்­ச­மாக, 50 சத­வீ­தமும், எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு திட்­டங்­களில், 28 சத­வீ­தமும், கூடு­த­லாக செல­வா­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)