பதிவு செய்த நாள்
16 மார்2016
07:33

மும்பை : பெங்களூரைச் சேர்ந்த, ‘ஹெல்த்கேர் குளோபல் என்டர்பிரைசஸ்’ நிறுவனத்தின் பங்கு வெளியீடு இன்று துவங்குகிறது.ஒரு பங்கின் விலை, 205 – 218 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பங்கு வெளியீட்டின் மூலம், 650 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இத்தொகையை மருத்துவ சாதனங்கள் வாங்குவது உள்ளிட்ட செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளும் இந்நிறுவனம்.தற்போது, இந்நிறுவனம், எச்.சி.ஜி., என்ற ‘பிராண்ட்’ பெயரில், 14 இடங்களில், ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையங்களை நிர்வகித்து வருகிறது.இந்தாண்டு, இதுவரை, ‘குயிக் ஹீல் டெக்னாலஜிஸ், டீம்லீஸ் சர்வீசஸ், பிரிசிஷன் கேம்ஷாப்ட்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டுள்ளன. நான்காவதாக, ஹெல்த்கேர் குளோபல் என்டர்பிரைசஸ் நிறுவனம், இன்று பங்கு வெளியீடு மேற்கொள்கிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|