பதிவு செய்த நாள்
16 மார்2016
07:34

புதுடில்லி : பி.எஸ்.என்.எல்., நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன், ‘இன்ட்ரா சர்க்கிள் ரோமிங்’ கட்டணங்கள் குறித்தான ஒப்பந்தத்தில் கையெழுத்திட பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் அனுமதி அளித்திருக்கிறது.இந்திய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நாடு முழுவதிலுமுள்ள 22 வட்டங்களில், ரோமிங் குறித்தான ஒப்பந்தம் ஒன்றை, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் செய்துகொள்ள உள்ளது. இதற்கு பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் அனுமதி அளித்திருக்கிறது. இது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் பேசியபோது, ‘இரண்டு நிறுவனங்களும் இணைந்து, இன்னும் ஒரு மாத காலத்துக்குள் ஒப்பந்தத்தை நிறைவேற்றும். தொழில்நுட்ப விஷயங்கள் குறித்து முடிவுக்கு வர இன்னும் சிறிது கால அவகாசம் தேவைப்படும்’ என்றனர்.இதுமட்டுமின்றி தனது கட்டமைப்புளை பிற தொலைதொடர்பு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்வது குறித்தான பேச்சு வார்த்தைகளையும் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|