பதிவு செய்த நாள்
16 மார்2016
10:24

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 70.14 புள்ளிகள் சரிந்து 24,481.03-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 13.55 புள்ளிகள் சரிந்து 7,447.05-ஆகவும் இருந்தது.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவு, முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்வது போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன.
இரு தினங்களுக்கு முன்னர் மத்திய அரசு பக்க விளைவுகள் ஏற்படுத்தும் 344 மருந்துகளுக்கு தடை விதித்தது. இதன்காரணமாக இன்றைய வர்த்தகத்தில் மருத்துவம் சார்ந்த பங்குகள் குறிப்பாக சிப்லா, சன்பார்மா, டாக்டர் ரெட்டி ஆகிய பங்குகள் அதிக சரிவுடன் காணப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|