பதிவு செய்த நாள்
16 மார்2016
14:24

மும்பை: மத்திய அரசின் தடை உத்தரவை தொடர்ந்து, 'புராக்டர் அண்ட் கேம்பிள்' நிறுவனம், 'விக்ஸ் ஆக் ஷன் -500' மாத்திரை உற்பத்தியை நிறுத்தியுள்ளது. 'ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துபவை' எனக் கூறி, இருமல் மருந்துகள், வலி நிவாரண மருந்துகள் உட்பட, 344 மருந்துகளுக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் தடை விதித்தது.
இந்த மாத்திரைகளில், ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துப் பொருட்கள் கலந்துள்ளன.மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து, 'கோரக்ஸ்' இருமல் மருந்து உற்பத்தியை, அந்நிறுவனம் நிறுத்தியது. மத்திய அரசின் தடை பட்டியலில், 'விக்ஸ் ஆக் ஷன் - 500' மாத்திரையும் இடம் பெற்றிருந்தது.
இதையடுத்து, அமெரிக்காவைச் சேர்ந்த, 'புராக்டர் அண்ட் கேம்பிள்' நிறுவனம், காய்ச்சல், சளிக்காக மக்கள் பயன்படுத்தும், 'விக்ஸ் ஆக் ஷன் -500' மாத்திரைகள் உற்பத்தியை நிறுத்தி உள்ளது. இந்த தகவலை, பங்குச் சந்தைக்கும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|