பதிவு செய்த நாள்
16 மார்2016
17:35

மும்பை : இருதினங்களாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவிலிருந்த இருந்ந நிலையில் இன்று(மார்ச் 16ம் தேதி) உயர்வுடன் முடிந்தன.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு, முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கின. ஆனால் மதியத்திற்கு மேல் வர்த்தகம் உயர தொடங்கின. அமெரிக்க பெடரல் வங்கியின் இரண்டு நாள் கூட்டம் நடைபெறுவதால் இதில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பால் பங்குச்சந்தைகள் உயர்ந்தன. குறிப்பாக வங்கி தொடர்பான பங்குகள் ஏற்றம் காண இறுதியில் வர்த்தகம் உயர்வுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 131.31 புள்ளிகள் உயர்ந்து 24,682.48-ஆகவும், நிப்டி 38.15 புள்ளிகள் உயர்ந்து 7,498.75-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில், 1405 நிறுவன பங்குகள் சரிந்தும், 1160 நிறுவன பங்குகள் உயர்ந்தும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|