பதிவு செய்த நாள்
17 மார்2016
00:57
மும்பை : ராயல் என்பீல்டு நிறுவனம், தன் புதிய ஹிமாலயன் பைக்கை அறிமுகம் செய்திருக்கிறது.சென்னையைச் சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனம், 411 சி.சி., திறன் கொண்ட புதிய ஹிமாலயன் பைக்கை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் விலை சுமார்,1 லட்சத்து, 55 ஆயிரம் ரூபாய். இதன் மும்பை ஆன்ரோடு விலை, 1 லட்சத்து, 78 ஆயிரத்து, 872 ரூபாய். இவ்வளவு அதிக திறன் கொண்ட பைக் பிரிவில் இதுதான் சாதாரணமானவர்களும் வாங்கும் விலையில் இருக்கிறது. இந்த புதிய பைக் மிகவும் கரடுமுரடான பாதைகளில் பயணம் செய்வதற்கேற்ற வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. இந்த பைக்கை அறிமுகம் செய்வதற்கு முன், சுமார் இரண்டு ஆண்டுகள் இமயமலைப் பகுதியில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த பைக், கடந்த மாதம் நடைபெற்ற டில்லி ஆட்டோ எக்ஸ்போவுக்கு சிறிது முன்புதான் பார்வைக்கு வைக்கப்பட்டது. இப்போது வினியோகத்துக்கு தயாராகிவிட்டது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|