பதிவு செய்த நாள்
17 மார்2016
01:02
சென்னை : ‘டி.வி.எஸ்., மோட்டார்ஸ்’ நிறுவனம், அதன், இருசக்கர வாகனங்களை, ‘ஸ்நாப்டீல்’ வலைதளம் வாயிலாகவும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது; இதற்காக, ஸ்நாப்டீல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.இது குறித்து, டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் (விற்பனை மற்றும் சேவை), ஜே.எஸ்.சீனிவாசன் கூறியதாவது: இந்த ஒப்பந்தம் மூலம், ஸ்நாப்டீல் வலைதளத்தில், டி.வி.எஸ்., நிறுவனத்தின் ஒன்பது வகையான இருசக்கர வாகனங்களை வாங்கலாம். வலைதளத்திலேயே, விருப்பமான வாகனங்களை, விரும்பிய வண்ணங்களில் தேர்வு செய்யலாம். தங்களுக்கு அருகாமையில் உள்ள விற்பனை முகவர்களை தேர்வு செய்யும் வசதியும், வலைதளத்தில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். ஸ்நாப்டீல் வலைதளம், இருசக்கர வாகனங்களுக்காக, ‘ஸ்நாப்டீல் மோட்டார்ஸ்’ என்ற பிரிவை, கடந்த ஆண்டு நவம்பரில் துவங்கியது. இப்பிரிவில், டி.வி.எஸ்., வாகனங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|