மருந்து துறைக்கு ரூ.1,000 கோடி இழப்புமருந்து துறைக்கு ரூ.1,000 கோடி இழப்பு ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.66.84 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.66.84 ...
லண்­டனில் முத­லீடு; இந்­திய நிறு­வ­னங்கள் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2016
01:07

லண்டன் : இந்­திய நிறு­வ­னங்கள், பிரிட்டன் தலை­நகர் லண்­டனில், அதிக அளவில் முத­லீடு செய்து, இரண்­டா­வது இடத்தைப் பிடித்­துள்­ளன; முத­லி­டத்தில் அமெ­ரிக்க நிறு­வ­னங்கள் உள்­ளன.
பிர­தமர் மோடி, 2014ல் பத­வி ­யேற்­றது முதல், ஏரா­ள­மான நாடு­க­ளுக்குச் சென்று, அங்­குள்ள தொழி­ல­தி­பர்­களை, இந்­தி­யாவில் முத­லீடு செய்ய அழைப்பு விடுத்து வரு­கிறார். இதற்­கி­டையே, இந்­திய நிறு­வ­னங்கள், லண்­டனில் ஓசை­யின்றி அதிக அளவில் முத­லீடு செய்து வரு­வது, வெளிச்­சத்­திற்கு வந்­து உள்­ளது.
இது குறித்து, லண்டன் அண்ட் பார்ட்னர்ஸ் நிறு­வனம் வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: கடந்த, 2005 முதல், லண்டனில், அனைத்து துறை­க­ளிலும், இந்­திய நிறு­வ­னங்­களின் பங்­கேற்பு, 117 சத­வீதம் அதி­க­ரித்­துள்­ளது. அவற்றில், தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களின் முத­லீடு, 133 சத­வீதம் உயர்ந்­துள்­ளது. லண்­டனில், முத­லீடு செய்­துள்ள இந்­திய நிறு­வ­னங்­களில், 46 சத­வீதம், தொழில்­நுட்பத் துறை சார்ந்­தவை. சமீப ஆண்­டு­களில், தொழில்­நுட்பத் துறையைச் சேர்ந்த, பல நிறு­வ­னங்கள், லண்­டனில் வர்த்­த­கத்தை துவக்கி வரு­கின்­றன. குறிப்­பாக, சாப்ட்வேர் பரி­சோ­தனை சேவையில் ஈடு­பட்டு வரும், ‘சிக்­னிட்டி டெக்­னா­லஜிஸ்’ நிறு­வனம், வாடிக்­கை­யாளர் சேவை துறையில் உள்ள, ‘கயாகோ’ உட்­பட, ஏரா­ள­மான நிறு­வ­னங்கள், லண்­டனில் கால் பதித்­துள்­ளன.
கடந்த, ஐந்து ஆண்­டு­களில், லண்டனில் செயல்­பட்டு வரும் இந்­திய நிறு­வ­னங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட முத­லீடு, ஏழு மடங்கு அதி­க­ரித்து, 3,049 கோடியில் இருந்து, 22 ஆயி­ரத்து, 165 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. உல­க­ளா­விய வர்த்­தக செயல்­பா­டு­க­ளுக்கு ஏற்ற மைய­மாக, லண்டன் உள்­ளதால், அங்கு பன்­னாட்டு நிறு­வ­னங்­களின் முத­லீடு அதி­க­ரித்து வரு­கி­றது. அமெ­ரிக்கா, இந்­தி­யாவைத் தொடர்ந்து, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள், லண்­டனில் அதிகம் முதலீடுசெய்­துள்­ளன.இவ்­வாறு அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
தாய்­லாந்தும் அழைப்பு :லண்­டனில், இந்­திய நிறு­வ­னங்­களின் முத­லீ­டுகள் அதி­க­ரித்து வரும் நிலையில், தாய்­லாந்தும், தங்கள் நாட்டில் முத­லீடு செய்ய வரு­மாறு இந்­திய நிறு­வ­னங்­க­ளுக்கு அழைப்பு விடுத்­தி­ருக்­கி­றது. குறிப்­பாக, இந்­திய மருந்து மற்றும் தகவல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களை, தங்கள் நாட்டில் முத­லீடு செய்ய அழைப்பு விடுத்­தி­ருக்­கி­றது. தாய்­லாந்தில், ஏற்­க­னவே, ‘டி.சி.எஸ்., மகிந்­திரா, விப்ரோ, போலாரிஸ், ஆதித்ய பிர்லா குழுமம், 3ஐ இன்­போடெக், டெக் ட்ரீ’ உள்­ளிட்ட பல நிறு­வ­னங்கள் செயல்­பட்டு வருகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
business news
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்
business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் மார்ச் 17,2016
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)