பதிவு செய்த நாள்
19 மார்2016
04:47
பானாஜி:பி.எம்.டபிள்யூ., கார் தயாரிப்பு நிறுவனம், மினி பிராண்டு கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ‘மினி கன்வர்ட்டிபிள்’ கார்களை, இந்தியாவிலேயே அசெம்பிளிங் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும், அந்நிறுவனம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிரபல கார் நிறுவனமான பி.எம்.டபிள்யூ., அண்மையில், ஐந்தாவது மினி கன்வர்ட்டிபிள் மாடல் காரை அறிமுகம் செய்தது. பி.எம்.டபிள்யூ., நிறுவனம், ஏற்கனவே, சென்னையில் அசெம்பிளிங் யூனிட்டை நிறுவி, எட்டு வகையான கார்களை விற்பனை செய்து வருகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பி.எம்.டபிள்யூ., இந்திய பிரிவின் தலைவர் பிலிப், ‘‘அதிக எண்ணிக்கையில் மினி பிராண்ட் கார்களை விற்கும்போது, இங்கே அசெம்பிளிங் யூனிட் அமைப்பது குறித்து பரிசீலிப்போம். அதே சமயம் எங்கள் தயாரிப்பை மாஸ்பிராண்டாக மாற்றி, அதிகமாக விற்கும் எண்ணமும் இல்லை,” என்றார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|