பதிவு செய்த நாள்
19 மார்2016
05:00
சென்னை:சுசூகி நிறுவனம், தன் புதிய தயாரிப்பான, ‘அக்செஸ் 125 சி.சி.,’ ஸ்கூட்டரை சென்னையில் அறிமுகம் செய்தது.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன், மேம்படுத்தப்பட்ட, அக்செஸ் ஸ்கூட்டரை, சென்னையில் அறிமுகம் செய்தது. இதற்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட, அக்செஸ் ஸ்கூட்டரின் விற்பனை, 20 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில், 125 சி.சி., திறன் உடைய புதிய அக்செஸ் ஸ்கூட்டர் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
அதிக சக்தி உடைய இந்த ஸ்கூட்டர், எடை குறைவாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், அதிக மைலேஜ் தரும். இதில், கரடுமுரடான சாலைகளில் செல்வதற்கேற்ப முன்புற டயர், 12 அங்குல அகலத்திலும், சிறப்பான, ‘சஸ்பென்ஷன்’ வசதியுடனும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது, ஐந்து நிறங்களில் கிடைக்கும். சென்னையில், இதன் ஷோரூம் விலை, 57,947 ரூபாய்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|