பொருட்­களை இணை­யத்தில் விற்க அமே­சானின் ‘தத்கல்’ திட்டம்பொருட்­களை இணை­யத்தில் விற்க அமே­சானின் ‘தத்கல்’ திட்டம் ... ரூர்­கேலா ஸ்டீல் பிளான்ட் ரஷ்ய தொழில்­நுட்­பத்தில் தயா­ரிப்பு ரூர்­கேலா ஸ்டீல் பிளான்ட் ரஷ்ய தொழில்­நுட்­பத்தில் தயா­ரிப்பு ...
வேலை­ வாய்ப்­புகள்... ஆசிய – ஆஸ்­தி­ரே­லிய நாடு­களில் முத­லி­டத்தை பிடிக்கும் இந்­தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2016
05:03

புது­டில்லி:‘ஆசிய – ஆஸ்­தி­ரே­லிய பிராந்­தி­யத்தில், இந்­தாண்டு வேலை­வாய்ப்­பு­களை வாரி வழங்­கு­வதில், இந்­தியா முத­லிடம் பிடிக்கும்’ என, ஆய்­வொன்றில் தெரி­ய­வந்­துள்­ளது.அமெ­ரிக்கன் எக்ஸ்­பிரஸ் நிறுவனம், சி.எம்.ஓ., ரிசர்ச் நிறு­வ­னத்­துடன் இணைந்து, சர்­வ­தேச வர்த்­தகம் தொடர்­பான ஆய்­வ­றிக்­கையை வெளி­யிட்டு உள்­ளது.
அதன் விவரம்:மத்­திய அரசு, தொழில் துறையை ஊக்­கு­விக்க, பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கி­றது. இதன் விளை­வாக, நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி சூடு­பி­டித்து உள்­ளது. பல்­வேறு துறை­களைச் சேர்ந்த நிறு­வ­னங்­களின் வணிகம் பெருகி வரு­கி­றது. அதை­யொட்டி, ஏரா­ள­மான நிறு­வ­னங்கள், இந்­தாண்டு, மிக அதி­க­ளவில் ஊழி­யர்­களை பணிக்கு அமர்த்ததிட்­ட­மிட்டு வரு­கின்­றன.
இதற்கு, வேலை­வாய்ப்பு சார்ந்த திறன் வளர்ப்பு பயிற்­சிக்கு, மத்­திய அரசு அளித்து வரும் முக்­கி­யத்­து­வமும் முக்­கிய காரணம் எனலாம். இந்­தாண்டு, இந்­தியா, அமெ­ரிக்கா, மெக்­சிகோ ஆகிய மூன்று நாடு­களில், பணி­யாளர் சேர்க்கை, 13 சத­வீதம் அதி­க­ரிக்கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.
இதனால், உல­க­ளவில் நிதித் துறை சார்ந்த பெரிய நிறு­வ­னங்­களின் பணி­யா­ளர்கள் எண்­ணிக்கை, சரா­ச­ரி­யாக, 9 சத­வீதம் உயரும்.அதே­ச­மயம், இந்­திய நிறு­வ­னங்­களை பொறுத்­த­வரை, திற­மை­யான பணி­யா­ளர்கள் கிடைப்பது தான் பிரச்­னை­யாக உள்­ளது.
விற்­பனை மற்றும் ‘மார்க்­கெட்டிங்’ துறையில், ஏரா­ள­மா­னோ­ருக்கு வேலை­வாய்ப்பு காத்­தி­ருக்­கி­றது. ஆனால், அப்­பிரிவு­களில் வல்­லு­னர்­க­ளுக்கு பற்­றாக்­குறை உள்­ளதால், நிறு­வ­னங்­களால், வளர்ச்சி இலக்கை எட்ட முடி­யாத நிலை உள்­ளது. இக்­க­ருத்தை, ஆய்வில் பங்­கேற்ற இந்­திய நிதி நிறு­வ­னங்­களின் மூத்த அதி­கா­ரி­களில், 10க்கு, ஏழு பேர் தெரி­வித்து உள்­ளனர். சில பிரத்­யேக பணி­க­ளுக்கு, வல்லுனர்கள் கிடைக்­காமல் நிறு­வ­னங்கள் தவிப்­ப­தாக, 60 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மானோர் கூறி­யுள்ளனர். தகவல் தொழில்­நுட்பம், நிர்­வாகம், பி.பி.ஓ., போன்ற பணி­க­ளுக்கு, ஊழி­யர்கள் கிடைப்­பது சிர­ம­மாக உள்­ளது.
அதனால், ‘நிறு­வ­னங்கள், ஊதிய உயர்வு வழங்கி, ஊழி­யர்­களை தக்­க­வைத்துக் கொள்ளும்’ என்­பது, ஆய்வில் பங்­கேற்ற பெரும்­பான்மை­யி­னரின் கருத்தாக உள்ளது.வேலை பார்க்கும் சூழலை மேம்­ப­டுத்­து­வது; பணி­யா­ளர்களை பல பிரி­வு­க­ளுக்கு மாற்றுவது போன்­ற­வற்றின் மூலமாகவும் நிறுவனங்கள் ஊழியர்களை தக்க வைத்துக்கொள்கின்றன.
3 நாடுகள்* உலக நாடு­களில் உள்ள, மிகப்­பெ­ரிய நிறு­வ­னங்­களில், நிதி மற்றும் நிர்­வாகத் துறை­களில் பணி­யாற்றி வரும், அனு­பவம் வாய்ந்த மூத்த அதி­காரி­க­ளிடம் ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது * இந்­தாண்டு, இந்­தியா, அமெ­ரிக்கா, மெக்­சிகோ ஆகிய மூன்று நாடு­களில், பணி­யாளர் சேர்க்கை, 13 சத­வீதம் அதி­க­ரிக்கும்* இந்­திய நிறு­வ­னங்கள், இந்­தாண்டு அதி­க­ளவில் வேலை­வாய்ப்பு வழங்கும் என, 83 சத­வீ­தத்­தி­னரும்; பணி­பு­ரிவோர் எண்­ணிக்கை, 10 சத­வீதம் அதி­க­ரிக்கும் என, 52 சத­வீதம் பேரும் கருத்து தெரி­வித்து உள்­ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)