பதிவு செய்த நாள்
20 மார்2016
07:07
சென்னை : ‘ஆன்லைன்’ தரகு நிறுவனமான ஜெரோதா தமிழ் மொழியில், ‘கைட்’ எனும் வர்த்தக தளத்தை ஆரம்பித்திருக்கிறது. மேலும், அனைத்து சமபங்கு முதலீடுகளுக்கும், எந்தவித தரகுக் கட்டணமும் இல்லை என்றும், அந்நிறுவனம்தெரிவித்திருக்கிறது.பங்குச் சந்தையில் பங்கேற்பது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே குறைவாக இருக்கிறது. பிராந்திய மொழிகளில், பங்கு வர்த்தகத்தில் ஈடுபட வாய்ப்பளித்தால் அதிகம் பேரை ஈர்க்க முடியும். இதன் அடிப்படை யில், தமிழ் மொழியில் வர்த்தக தளத்தை அறிமுகம் செய்திருக்கிறது ஜெரோதா.இதுகுறித்து ஜெரோதா நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி நிதின் காமத் கூறியதாவது: முதலீட்டு கலாசாரம் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில், ‘ஜீரோ’ தரகு கட்டணத்துடன், சுலபமாக தமிழிலேயே வர்த்தகம் செய்ய வசதியாக, கைட் தளத்தை அமைத்துள்ளோம். மேலும், ‘மியூச்சுவல் பண்டு’க்காவும் தளத்தை ஏற்படுத்தி இருக்கிறோம். தமிழ் தவிர இந்தி, கன்னடம், மலையாளம், பஞ்சாபி உள்ளிட்ட பல மொழிகளிலும், இந்த கைட் தளம் இயங்குகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|