பதிவு செய்த நாள்
20 மார்2016
07:09
புதுடில்லி : அரவிந்த் குழுமத்தைச் சேர்ந்த, ‘அரவிந்த் ஸ்போர்ட் லைப் – ஸ்டைல்’ நிறுவனம், அமெரிக்காவின், ‘கோல் ஹன்’ மற்றும் சிங்கப்பூரின், ‘ஹீட் வேவ்’ நிறுவனங்களின் காலணிகள், தோல் பைகள், உள்ளிட்ட நாகரிக பொருட்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ராஜீவ் மேத்தா கூறியதாவது:முதற்கட்டமாக, வரும் மே மாதம், டில்லியில், கோல் ஹன் கடை திறக்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, பெங்களூரு, மும்பை, புனே நகரங்களிலும் திறக்க உள்ளோம். இங்கே, 7,000 முதல், 24 ஆயிரம் ரூபாய் வரையில், காலணிகள், கைப்பைகள் மற்றும் தோல் பொருட்கள் கிடைக்கும். பெங்களூரு, ஹீட் வேவ் கடைகளில், பெண்களுக்கான ஆடம்பர காலணிகள் விற்பனை செய்யப்படும். இவை, 2,000 முதல் 4,500 ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|