பதிவு செய்த நாள்
20 மார்2016
07:11

புதுடில்லி : தொலை தொடர்பு துறையில், அசுர பலத்துடன் களமிறங்கும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் போட்டியைச் சமாளிக்க, பார்தி ஏர்டெல் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முகேஷ் அம்பானியின்,‘ஆர்ஜியோ’ என, சுருக்கமாக அழைக்கப்படும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இந்தாண்டு, நாட்டில் உள்ள, 22 தொலை தொடர்பு வட்டங்களிலும், அதிவிரைவான, ‘4ஜி’ மொபைல் போன் சேவையை வழங்க உள்ளது. இத்துடன், மின்னல் வேகத்தில் இணையதளத்தை அணுகவும், விரும்பும் திரைப்படங்கள், ‘டிவி’ தொடர்களை பார்க்கவும், வீடுகளுக்கு கண்காணிப்பு கேமரா சேவை வழங்கவும், திட்டமிட்டு உள்ளது. இதனால், ‘ஏர்டெல், வோடபோன், ஐடியா செலுலார் உள்ளிட்ட போட்டி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும்’ என, தர ஆய்வு நிறுவனங்கள் எச்சரித்து உள்ளன.
இப்போட்டியை சமாளிக்கும் நோக்கில், பார்தி ஏர்டெல் நிறுவனம், சமீபத்தில், வீடியோகான் நிறுவனத்திடம் இருந்து, ஆறு தொலை தொடர்பு வட்டங்களுக்கான, 1,800 மெகாஹெர்ட்ஸ் ‘ஸ்பெக்ட்ரம்’ உரிமையை, 4,438 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. வீடியோகான், இந்த உரிமங்களை, 2012 நவம்பரில், மத்திய அரசு மேற்கொண்ட ஏலம் மூலம், 1,330 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது.‘ஆர்ஜியோ’வின் போட்டி யைச் சமாளிப்பதற்காக, இத்தொகையை விட, 65 சதவீதம் கூடுதலாக, வீடியோகான் நிறுவனத்திற்கு, பார்தி ஏர்டெல் வழங்கி யுள்ளது. இதன் மூலம், மொத்தம் உள்ள, 22 தொலை தொடர்பு வட்டங்களில், 19 வட்டங்களில், ஏர்டெல் நிறுவனம், சேவை வழங்க முடியும். ‘ஆர்ஜியோ’வின் போட்டியை ஓரளவு சமாளிக்க, இது உதவும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஐடியா செலுலார் நிறுவனம், 12 தொலை தொடர்பு வட்டங்களில், ‘4ஜி’ சேவைக்கு உரிமம் பெற்றுள்ளது. இந்நிறுவனம், வரும் ஜூன் மாதத்திற்குள், 750 நகரங்களில், ‘4ஜி’ சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.ஐந்து வட்டங்களில், ‘4ஜி’ சேவைக்கான உரிமம் வைத்துள்ள வோடபோன் நிறுவனம், சமீபத்தில், டில்லி, மும்பை, பெங்களுரு ஆகிய நகரங்களில், ‘4ஜி’ சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதர நகரங்களுக்கும் இச்சேவையை விரிவுபடுத்த உள்ளது.
2032ம் ஆண்டு வரை* நாட்டிலேயே தொலை தொடர்பு சேவையில், அதிக வாடிக்கையாளர்களுடன், ஏர்டெல் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. * அண்மையில், ஏர்டெல் நிறுவனம், வீடியோகான் நிறுவனத்திடம் இருந்து, குஜராத், பீஹார், ஹரியானா, மத்திய பிரதேசம், உ.பி., கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கான, 1,800 மெகாஹெர்ட்ஸ் ‘ஸ்பெக்ட்ரம்’ உரிமத்தை வாங்கியுள்ளது.* இந்த உரிமம் மூலம், ஏர்டெல் நிறுவனம், 2032ம் ஆண்டு வரை அப்பகுதிகளில், தொலை தொடர்பு சேவை வழங்கலாம்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|