பதிவு செய்த நாள்
20 மார்2016
23:33
மும்பை : வீடு தேடி வரும் வீடியோ சேவையை வழங்கும் அமெரிக்காவின், ‘நெட்பிளிக்ஸ்’ நிறுவனம், இந்தியாவிலும் அறிமுகமாகியுள்ளது. இந்நிலையில், அடுத்தகட்டமாக இந்நிறுவனம், ‘பாலிவுட்’ படங்களை தானே தயாரிக்கவும் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரீட் ஹேஸ்டிங்க்ஸ் கூறியதாவது: இந்தியாவில் எங்கள் சேவை, கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்டது. உலகம் முழுவதும் எங்களுக்கு, 7.50 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது, இந்திய பாலிவுட் படங்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில், நிறுவனத்தின் வீடியோ சேவைகளை பார்க்க, வாடிக்கையாளரிடம் இருந்து பலவகை பிரிவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|