பதிவு செய்த நாள்
20 மார்2016
23:38
மும்பை : மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில், தானே புறநகர் பகுதியில் ஷேத் கார்ப்பரேஷன் நிறுவனத்தின், ‘விவியானா மால்’ உள்ளது. இந்த வர்த்தக வளாகத்தின், 50 சதவீத பங்குகளை, சிங்கப்பூர் அரசின், ஜி.ஐ.சி., நிறுவனம், 1,000 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. பத்து லட்சம் சதுர அடி பரப்பிலான விவியானாவில், 150க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன; அவற்றில், சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை தவிர, 14 ‘மல்டி பிளக்ஸ்’ திரையரங்குகளும் உள்ளன. விவியானா வணிக வளாகத்தில், சதுர அடி, 150 ரூபாய் என்ற அளவில் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. ஜி.ஐ.சி., நிறுவனம், மும்பையின், காட்கோபர் பகுதியில் உள்ள, ‘ஆர் சிட்டி மால்’ன், 50 சதவீத பங்குகளை ஏற்கனவே வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|