பதிவு செய்த நாள்
23 மார்2016
07:11

மும்பை : மொபைல் போன் வங்கி சேவையில், தனியார் வங்கிகளை விட, பொதுத் துறை வங்கியான, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, முதலிடத்தில் இருக்கிறது. 38 சதவீத பங்களிப்புடன், முதலிடத்தை அது பிடித்திருக்கிறது. தங்கள் வாடிக்கையாளர்களை கவர, தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகள், இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் என, பல்வேறு வசதிகளை செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 2015 டிச., மாதம், பாரத ஸ்டேட் வங்கியின் மொபைல் போன் சேவை மூலம், 17 ஆயிரத்து, 636 கோடி ரூபாய் மதிப்பிலான, 1.51 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இதையடுத்து, தனியார் துறையைச் சேர்ந்த ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில், 70.01 லட்சம்; ஆக்சிஸ் வங்கியில், 60.28 லட்சம் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2015 டிச., மாதத்தில், மொபைல் போன் வங்கி பரிவர்த்தனையில், 38.44 சதவீத பங்களிப்புடன், எஸ்.பி.ஐ., வங்கி முதலிடத்தில் உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|