பதிவு செய்த நாள்
25 மார்2016
07:53
மும்பை : இந்தியாவில், ‘ஸ்மார்ட்போன்’ மூலம், திரைப்படங்கள், ‘டிவி’ தொடர்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை பார்ப்பது அதிகரித்து வருகிறது. இந்த வகையில், ‘வயகாம் 18, ஸ்புல், நெக்ஸ் ஜிடிவி, பிரஸ்பிளே’ போன்ற நிறுவனங்கள், திரைப்படங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், வீடியோ விளையாட்டுகள் ஆகியவற்றை, ‘ஸ்மார்ட்போன்’ மூலம் வழங்கி வருகின்றன. இந்நிறுவனங்களின் ‘ஆப்’களை பதிவிறக்கி, சந்தா செலுத்தும் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு விருப்பமான திரைப்படங்களை தேர்வு செய்து, ‘ஸ்மார்ட்போன்’ மூலம் பார்த்து மகிழலாம்.பாலாஜி டெலிபிலிம் நிறுவனம், ஜூலையில்,‘டிவி’ தொடர்களை, ‘ஸ்மார்ட் போன்’ மூலம் வழங்க உள்ளது. இந்தியாவில், 19 – 34 வயதுள்ளோர், ‘ஸ்மார்ட்போன்’ மூலம், விரும்பும் திரைப்படங்களை பார்த்து ரசிப்பது அதிகரித்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|