பதிவு செய்த நாள்
25 மார்2016
07:54
புதுடில்லி : மாருதி நிறுவனம், தன் தயாரிப்புகளில் ஒன்றான, ‘எஸ் கிராஸ்’ வாகனங்களை, ஆரம்பகட்டத்தில் வாங்கியவர்களுக்கு, 90 ஆயிரம் ரூபாயை திருப்பிக் கொடுக்க முடிவு செய்திருக்கிறது.மாருதி சுசூகி நிறுவனம், அண்மையில் எஸ் கிராஸ் எனும் பெயரில் 1,600 சி.சி., சக்தி கொண்ட காரை அறிமுகப்படுத்தியது. ஆனால், அந்த கார் நுகர்வோர்களை கவரவில்லை. இதனால் அதன் விற்பனை குறைந்துவிட்டது. இதையடுத்து விற்பனையைக் கூட்ட, காரின் விலையில் சுமார், 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் வரை குறைத்துவிட்டது. இப்படி அதிரடி விலை குறைப்பை அடுத்து, ஆரம்ப கட்டத்தில் அதிக விலை கொடுத்து வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு, 90 ஆயிரம் ரூபாயை ரொக்கமாக திருப்பிக் கொடுக்க மாருதி நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|