பதிவு செய்த நாள்
26 மார்2016
05:14
மும்பை: நீர் சுத்திகரிப்பு சாதனங்கள் தயாரிக்கும் பிரிவில் நுழைய இருப்பதாக, ஹிண்ட்வேர் நிறுவனம் தெரிவித்துள்ளது.குளியலறை, கழிப்பறைகளுக்கு தேவையான பொருட்களை தயாரித்து வரும், முன்னணி இந்திய நிறுவனமான ஹிண்ட்வேர், வரும் ஜூன் – ஜூலையில், நீர் சுத்திகரிப்பு சாதனங்களையும் தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.இதுகுறித்து, செய்தியாளர்களிடம் இந்நிறுவனத்தின் நுகர்வோர் வியாபார பிரிவின் தலைவர் ராகேஷ் கவுல் கூறியதாவது:குளியலறை பிரிவில் எங்கள் தயாரிப்புக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. அரை நுாற்றாண்டுக்கும் மேலாக, எங்கள் தயாரிப்பை மக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். 2015-ல் வாட்டர் ஹீட்டர், மற்றும் ஏர் பியூரிபையர் ஆகியவற்றை அறிமுகம் செய்தோம். இப்போது சமையலறை பிரிவில், பல சாதனங்களை அறிமுகம் செய்திருக்கிறோம்.அடுத்து, வரும் ஜூன் – ஜூலையில், வாட்டர் பியூரிபையரையும் அறிமுகம் செய்ய இருக்கிறோம்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|