பதிவு செய்த நாள்
26 மார்2016
05:21
நியூயார்க்: யாகூவின் நிர்வாகிகளை அடியோடு மாற்ற வேண்டும் என, முதலீட்டாளர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.இணைய தேடல் தொழில்நுட்பத்தில், முன்னணி நிறுவனமான யாகூ, சமீப காலமாக தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இதையடுத்து, யாகூவின் நிர்வாகிகள், நல்ல ரிசல்ட்டை காட்ட வில்லை என்றும், அதன் நிர்வாக அமைப்பை அடியோடு மாற்றினால் தான், நிறுவனம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என்றும், அதன் முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், யாகூவில் முதலீடு செய்திருக்கும் ஹெட்ஜ் பண்டு நிறுவனமான, ஸ்டார்போர்டின் கடுமையான விமர்சனத்தில் கூறியுள்ளதாவது:நல்ல வாய்ப்புகள் இருந்தும் பயன்படுத்தாதது, மோசமான நிதி செயல்பாடு, பொறுப்பற்ற தன்மை, எதிர்காலம் குறித்த பார்வையின்மை என, நிர்வாகிகளிடம் பல குறைகள் இருக்கின்றன. எனவே, நிர்வாக அமைப்பை அடியோடு மாற்றினால்தான், நல்லது நடக்கும்.இவ்வாறு ஸ்டார்போர்டு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|