நோக்­கியா தொழிற்­சாலை மீண்டும் செயல்­ப­டுமா?நோக்­கியா தொழிற்­சாலை மீண்டும் செயல்­ப­டுமா? ... 10,000 வணி­கர்­க­ளுக்கு கடன் ‘ஆஸ்க்மி’ குழுமம் முடிவு 10,000 வணி­கர்­க­ளுக்கு கடன் ‘ஆஸ்க்மி’ குழுமம் முடிவு ...
இருசக்­கர வாகன டயர்; ‘கலக்க’ வரும் சர்­வ­தேச நாடுகள்; கலக்­கத்தில் இந்­திய நிறு­வ­னங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2016
06:05

புது­டில்லி : இந்­திய இருசக்­கர வாகன டயர் துறையில், ஜப்பான், தைவான் ஆகிய நாடு­க­ளுடன் உள்­நாட்டு நிறு­வ­னங்­களும் கள­மி­றங்க உள்­ளதால், பல கால­மாக இச்­சந்­தையில் ஆட்சி செலுத்­தி­வரும், விரல் விட்டு எண்­ணக்­கூ­டிய நிறு­வ­னங்கள் கலக்கம் அடைந்­துள்­ளன.
இந்­தி­யாவில், கார், பேருந்து, ‘டிரக்’ உள்­ளிட்ட வாக­னங்­க­ளுக்கு தேவை­யான, டயர்­களை தயா­ரித்து வரும் அப்­பல்லோ டயர்ஸ் நிறு­வனம், சமீ­பத்தில், இருசக்­கர வாகன டயர் தயா­ரிப்­பிலும் கால் பதித்­துள்­ளது. இந்­நி­று­வனம், அடுத்த இரண்டு ஆண்­டு­களில், மாதம், ஐந்து லட்சம் டயர்­களை விற்­பனை செய்ய, இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது. அது­போல, இது­வரை கார் மற்றும் கன­ரக வாக­னங்­க­ளுக்கு டயர்­களை தயா­ரித்து வரும், ஜே.கே.டயர்ஸ் நிறு­வ­னமும், இருசக்­கர வாக­னங்­க­ளுக்­கான டயர்­களை தயா­ரிக்க உள்­ளது. இதற்­காக, 2,200 கோடி ரூபாய் முத­லீட்டில், பி.கே.பிர்லா குழு­மத்­திடம் இருந்து, ஒரு டயர் தயாரிப்பு பிரிவை வாங்­கி­யுள்­ளது.
ஜப்­பானைச் சேர்ந்த, பிரிட்ஜ்ஸ்டோன் நிறு­வ­னமும், இந்­திய இருசக்­கர வாகன டயர் சந்­தையை கலக்க வரு­கி­றது. தைவானைச் சேர்ந்த, மேக்சிஸ் நிறு­வனம், குஜ­ராத்தில், இரு சக்­கர வாக­னங்­க­ளுக்­கான டயர் தொழிற்­சா­லையில் முத­லீடு செய்ய உள்­ளது. இவை தவிர, மேலும் சில நிறு­வ­னங்கள், இருசக்­கர வாகன டயர் சந்­தையை குறி­வைத்து, திட்­டங்கள் தீட்டி வரு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது. இதனால், இருசக்­கர வாகன டயர் சந்­தையில், வரும் ஆண்­டு­களில் கடும் போட்டி உண்­டாகும் சூழல் ஏற்­பட்­டுள்­ளது.
தேவையை விட, அதிக அளவில் டயர்கள் தயா­ரிக்­கப்­படும் சூழல் உரு­வாகி, விலையில் ஸ்திரத்­தன்மை ஏற்­படும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. புதிய நிறு­வ­னங்கள் வரு­கை யால், இருசக்­கர டயர் விற்­ப­னையில் நிறு­வ­னங்­களின் லாப வரம்பும் குறையும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அதே­ச­மயம், நடுத்­தர மக்கள் அதி­க­ரித்து வரு­வதும், கிரா­மப்­பு­றங்­களில் பெரு­கி­வரும் பணப்­புழக்­கமும், இருசக்­கர வாக­னங் கள் விற்­பனை உயர வழி­வ­குக்கும் என்­பதால், அவற்­றுக்­கான டயர் சந்தை விரி­வ­டையும். அதனால் தான், பல நிறு­வ­னங்கள், இச்­சந்­தையில் குதிக்க தயா­ராகி வரு­கின்றன எனவும் கரு­தப்­ப­டு­கி­றது.
பங்களிப்பு* இந்­தி­யாவில், 12 கோடி இரு சக்­கர வாக­னங்கள் புழக்­கத் தில் உள்­ளன* கடந்த மூன்று ஆண்­டு­களில், மோட்டார் சைக்கிள் 8 சதவீதம்; ஸ்கூட்டர் 20 சத­வீதம் என்ற அளவில் விற்பனை வளர்ச்­சியை கண்டுள்­ளன* நாட்டில் விற்­ப­னை­யாகும் டயர்­களில், இருசக்கர வாகன டயர்­களின் பங்களிப்பு, 50 சத­வீ­த­மாக உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)