இருசக்­கர வாகன டயர்; ‘கலக்க’ வரும் சர்­வ­தேச நாடுகள்; கலக்­கத்தில் இந்­திய நிறு­வ­னங்கள்இருசக்­கர வாகன டயர்; ‘கலக்க’ வரும் சர்­வ­தேச நாடுகள்; கலக்­கத்தில் இந்­திய ... ... 10,000 வணி­கர்­க­ளுக்கு கடன் ‘ஆஸ்க்மி’ குழுமம் முடிவு 10,000 வணி­கர்­க­ளுக்கு கடன் ‘ஆஸ்க்மி’ குழுமம் முடிவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வெற்றி மன­நி­லையை பெறும் வழிகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2016
07:13

வெற்­றிக்­கான வழி­களை எல்­லாரும் தேடிக் கொண்­டி­ருக்­கின்­றனர். சிந்­தனை பெரி­தாக இருந்தால் வெற்­றியும் பெரி­தாக இருக்கும் என ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்­தி­ருக்­கி­றது, டேவிட் ஸ்வார்ட்ஸ் எழு­திய, ‘தி மேஜிக் ஆப் திங்கிங் பிக்.’ இந்த புத்தகம், நாம் செயல்­ப­டு­வ­தற்­கான பரப்பு பரந்து விரிந்­தி­ருக்­கி­றது என ஊக்­க­ம­ளிக்­கி­றது.
* உங்­களால் வெற்றி பெற முடியும் என நம்­புங்கள். உங்கள் வெற்­றியின் அளவு, உங்கள் சிந்­த­னையின் அளவை சார்ந்தே அமையும். பெரி­தாக யோசிப்­ப­வர்கள், பெரிய அளவில் வளர்ச்சி காண்கின்றனர். உறு­தி­யான நம்­பிக்கை, வெற்­றிக்­கான வழி­களை காண துாண்­டு­கோ­ளாக அமைந்து அவற்றை தேடி அடைய வைக்­கி­றது. வெற்றி பற்றி யோசி­யுங்கள்; தோல்வி பற்­றி­யல்ல. நீங்கள், நினைத்துக் கொண்­டி­ருப்­பதை விட மேம்­பட்­டவர் என நம்­புங்கள். ஒரு போதும் உங்­களை குறைத்து மதிப்­பிட்டுக் கொள்ள வேண்டாம்
* கார­ணங்கள் சொல்லிக் கொண்­டி­ருப்­பதை விட்டு விடுங்கள்; அது தோல்வி மன­நிலை. உங்கள் திறனை குறைத்து மதிப்­பிட வேண்டாம். மற்­ற­வர்கள் திறனை அதி­க­மா­கவும் மதிப்­பிட வேண்டாம். உங்கள் வளங்­களில் கவனம் செலுத்­துங்கள்.
* நம்­பிக்­கையை உண்­டாக்கி, அச்­சத்தை போக்­குங்­கள். செயல், பயத்தை போக்கும். பயத்தை கண்­ட­றிந்து, அதற்­கான கார­ணங்­களை ஆய்வு செய்­யுங்கள். எதிர்­ம­றை­யான எண்­ணங்­களை தவிர்த்து விடுங்கள்.
* மனி­தர்­களின் மிகப்­பெ­ரிய பல­வீனம், தங்­களைப் பற்றி தாழ்­வாக நினைத்துக் கொள்­வது தான். எல்­லா­வற்­றையும் காட்­சிப்­படுத்திப் பாருங்கள். உங்­களைப் பற்றி பெரிய அளவில் யோசி­யுங்கள். வெற்றி, மகிழ்ச்சி மற்றும் கொண்­டாட்­டத்தை நினை­வு­ப­டுத்தும் வார்த்­தை­களை பயன்­ப­டுத்­துங்கள்.
* முன்­னேற்றம் தான் மிகவும் முக்­கி­ய­மானது. நீங்கள் எதி­லி­ருந்து துவங்­கு­கி­றீர்கள் என்­பதை விட, எவற்றை கற்றுக் கொண்டு பயன்­ப­டுத்­து­கி­றீர்கள் என்­பதே முக்­கியம். எல்­லா­வற்­றிலும் முன்­னேற்ற எண்ணம் கொண்­டி­ருக்க வேண்டும்.
* உங்­களை உங்­க­ளுக்கே விற்றுக் கொள்­ளுங்கள். அதா­வது, சுய நம்­பிக்கை கொள்­ளுங்கள். உணவுப் பழக்கம் உடலை உறு­தி­யாக்­கு­வது போல, மனப் பழக்கம் உள்­ளத்தை உறு­தி­யாக்கும். விமர்­ச­னங்கள் மற்றும் எதிர்­மறை கருத்­துக்­க­ளுக்கு எதி­ராக தற்­காப்பை உரு­வாக்கி கொள்­ளுங்கள்.
* உங்கள் அணு­கு­மு­றையை நண்­ப­னாக்கி கொள்­ளுங்கள். நீங்கள் செய்யும் எல்­லா­வற்­றிலும் உற்­சாகம் பொங்­கட்டும்.
* வெற்­றிக்கு மற்­ற­வர்கள் ஆத­ரவு முக்­கியம். வெற்­றி­க­ர­மான மனி­தர்கள், மற்­ற­வர்­களை நேசிக்க ஒரு­ வழி வைத்­தி­ருக்­கின்­றனர்.
* வெற்­றியை ஒரு பழக்­க­மாக்கி கொள்­ளுங்கள். இதை பயிற்சி செய்து வளர்த்துக் கொள்­ளலாம். செயல்­ப­டு­வ­தற்கு முன் எல்லா பிரச்­னை­க­ளையும் தீர்ப்­பதை விட, அவற்றை எதிர்­கொள்ளும் போது தீர்வு காணும் தன்­மையே வெற்­றி­யா­ளர்­க­ளுக்கு முக்­கியம். துவங்­கு­வது தான் செயல்­படத் துவங்­கு­வ­தற்­கான ஒரே வழி.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)