இருசக்­கர வாகன டயர்; ‘கலக்க’ வரும் சர்­வ­தேச நாடுகள்; கலக்­கத்தில் இந்­திய நிறு­வ­னங்கள்இருசக்­கர வாகன டயர்; ‘கலக்க’ வரும் சர்­வ­தேச நாடுகள்; கலக்­கத்தில் இந்­திய ... ... 10,000 வணி­கர்­க­ளுக்கு கடன் ‘ஆஸ்க்மி’ குழுமம் முடிவு 10,000 வணி­கர்­க­ளுக்கு கடன் ‘ஆஸ்க்மி’ குழுமம் முடிவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மகிழ்ச்­சியை நோக்கி நிதி திட்­ட­மிடல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2016
07:14

தனி­நபர் நிதி விவா­தங்­களில் பணம், முத­லீடு, வருவாய் பற்றி எல்லாம் பேசப்­படும் அள­வுக்கு மகிழ்ச்சி பற்றி பேசப்­ப­டு­வ­தில்லை. ஆனால், உங்­களை மகிழ வைப்­பது எவை என்­பது முக்­கி­ய­மான கேள்­வி­யாகும். இதற்­கான பதிலை தேடும் போது எண்­க­ளையும், கணக்­கு­க­ளையும் விட்டு விலகி, வாழ்க்­கையின் தரு­ணங்­களை அனு­ப­விப்­பதில் தவ­றில்லை என நினைக்க வைக்­கி­றது. இந்த கேள்­விக்­கான பதில் தெரிந்தால், அதன் அடிப்­ப­டையில் உங்கள் செலவு, பழக்­கங்­களை தீர்­மா­னித்துக் கொள்­ளலாம். பணம் சேர்ப்­பதை விட மகிழ்ச்­சி­யாக இருப்­ப­தற்­கான வழி­களை நோக்கி முன்­னே­றலாம். மகிழ்ச்சி என்­பது நிதி திட்­ட­மி­டலின் நோக்­க­மாகி, அதன் அடிப்­ப­டை­யா­கவும் மாறி­வி­டு­கி­றது. அதற்­காக, இஷ்டம் போல செல­விட வேண்டும் என்­றில்லை; மகிழ்ச்­சி­யையும், நீண்­ட­கால பாது­காப்­பையும் முக்­கி­ய­மாக கருத வேண்டும்.
நிதி ஆவணங்கள் பாதுகாப்பு
சேமிப்­பது, முத­லீடு செய்­வது போலவே நிதி ஆவ­ணங்­களை உரிய முறையில் பாது­காப்­பது அவ­சியம். நிதி ஆவ­ணங்கள் எனும் போது காப்­பீடு சான்­றிதழ் முதல் வைப்பு நிதி, பங்கு பத்­தி­ரங்கள், பரஸ்­பர நிதிகள், சொத்து பத்­திரம் என எல்லாம் அடங்கும். பாஸ்போர்ட், பான் கார்டு போன்­ற­வற்­றையும் கவ­ன­மாக பாது­காக்க வேண்டும். இவை தவிர வங்கி கணக்கு அறிக்­கைகள், கிரெடிட் கார்டு அறிக்­கைகள், பில்கள், ரசீ­துகள் ஆகி­ய­வற்­றையும் கவ­ன­மாக பரா­ம­ரிக்க வேண்டும். இந்த ஆவ­ணங்­களை கவ­ன­மாக பாது­காப்­பது ஒரு சிக்கல் என்றால், இவற்றில் எந்த ஆவ­ணங்­களை எல்லாம் நிரந்­த­ர­மாக பாது­காக்க வேண்டும்; எவற்றை எல்லாம் தேவை முடிந்­த­வுடன் அப்­பு­றப்­ப­டுத்­தலாம் எனும் கேள்­வியும் சிக்­கலை ஏற்­ப­டுத்­தலாம்.
இதற்­கான வழி­காட்டி இதோ:
வகைப்­ப­டுத்தல்நிதி ஆவ­ணங்கள் பாது­காப்பில் முதலில் செய்ய வேண்­டி­யது, அவற்றை வகைப்­ப­டுத்­து­வது தான். ஒரு சில ஆவ­ணங்­களை நிரந்­த­ர­மாக பாது­காக்க வேண்டும்; சில­வற்றை குறிப்­பிட்ட காலம் வரை பரா­ம­ரிக்க வேண்டும். சில ஆவ­ணங்­களை அவற்றின் சமீ­பத்­திய நகலை மட்டும் வைத்­தி­ருந்தால் போது­மா­னது. இந்த அடிப்­ப­டையில் நிரந்­தர பாது­காப்­பிற்­கா­னவை; குறிப்­பிட்ட காலத்­திற்­கா­னவை மற்றும் சமீ­பத்­திய நகல் தேவைப்­ப­டு­பவை என, மூன்று வகை­யாக பிரித்துக் கொண்டால் அவற்றை பாது­காப்­பதில் உரிய கவனம் செலுத்­தலாம்.
ஒரு சில ஆவ­ணங்­களை, அவை செல்­லு­ப­டி­யாகும் காலம் வரை பாது­காப்­பாக வைத்­தி­ருக்க வேண்டும். காப்­பீடு, வைப்பு நிதி சான்­றி­தழ்கள் போன்­றவை இதில் அடங்கும்.உதா­ரணம்: வரு­மான வரி தாக்கல் விவ­ரங்கள் (ஏழு ஆண்­டுகள்), வாரன்டி சான்­றி­தழ்கள் (வாரன்டி காலம் வரை), காப்­பீடு சான்­றி­தழ்கள் (காப்­பீடு காலம் வரை), வைப்பு நிதி மற்றும் தொடர் வைப்பு நிதி சான்­றி­தழ்கள் (முதிர்வு காலம் வரை), பண டிபாசிட் சான்­றி­தழ்கள் (அவற்­றுக்­கு­றிய காலம்).
சமீ­பத்­திய நகல்கள்கிரெடிட் கார்டு அறிக்கை மற்றும் பில் ரசீ­து­களின் சமீ­பத்­திய வடி­வத்தை மட்டும் வைத்­தி­ருந்தால் கூட போது­மா­னது.உதா­ரணம்: பில்கள், ரசீ­துகள், வரு­மான வரி விலக்கு சலுகை சான்­றி­தழ்கள், வீட்­டுக்­கடன் வட்டி விகித ரசீது, தற்­கா­லிக ரசீ­துகள்.
நிரந்­தர ஆவ­ணங்கள்முக்­கி­ய­மான சான்­றி­தழ்கள், சொத்து பத்­திரம் போன்­ற­வற்றை வாழ்நாள் முழு­வதும் பாது­காப்­பாக வைத்­தி­ருக்க வேண்டும்; இவற்றில் சில­வற்றை வாரி­சு­களும் பாது­காக்க வேண்டும்.உதா­ரணம்:பிறப்பு சான்­றிதழ், இறப்பு சான்­றிதழ், ஆதார் அடை­யாள அட்டை, வாக்­காளர் அடை­யாள அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட், திரு­மண சான்­றிதழ், சொத்து பத்­தி­ரங்கள், ஜாதி சான்­றிதழ், உயில்கள், பத்­தி­ரங்கள் மற்றும் பங்கு பத்­தி­ரங்கள், ஒய்வு கால திட்ட பத்­தி­ரங்கள்

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)