பதிவு செய்த நாள்
28 மார்2016
07:27
புதுடில்லி : எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம், 4,000 பெட்ரோல் நிரப்பும் நிலையங்களுக்கு தேவைப்படும், 7,000 ஸ்டோரேஜ் டேங்குகள் தயாரிப்பதற்கான ஆர்டரை பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு, 100 கோடி ரூபாய் ஆகும்.எஸ்ஸார் குழுமத்தைச் சேர்ந்த, எஸ்ஸார் ஆயில் நிறுவனம், 4,000 பெட்ரோல் பங்க்குகள் திறக்க முடிவு செய்துள்ளது. இவற்றுக்கு, 7,000 பெட்ரோல் ஸ்டோரேஜ் டேங்குகள் தேவைப்படுகின்றன. இந்நிறுவனம் தயாரிக்க உள்ள ஒரு பெட்ரோல் டேங்கின் ஆயுட்காலம், 20 முதல் 30 ஆண்டுகள் வரை வரும். டேங்குகள் சென்னை, ஹசீரா, புனே, பகதுர்கர் ஆகிய இடங்களில் தயாரிக்கப்படும்.இந்த ஒப்பந்தம், எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என கருதப்படுகிறது. வெறும் உருக்கு தயாரிப்போடு நின்று விடாமல், அடுத்து உருக்கினால் ஆன பொருட்களையும் தயாரிக்கும் முயற்சிக்கு இது நல்ல உந்துதலாக இருக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|