பணி­யாளர் திறனை உயர்த்த வேண்டும்: ஆய்­வ­றிக்கைபணி­யாளர் திறனை உயர்த்த வேண்டும்: ஆய்­வ­றிக்கை ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.70 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.70 ...
மத்­திய அரசு அதி­ரடி; ஒரே நாளில் நிறு­வ­னங்கள் பதிவு; புதிய வசதி இன்று அறி­முகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2016
07:31

புது­டில்லி : மத்­திய அரசு, அன்­னிய முத­லீ­டு­களை அதிக அளவில் ஈர்க்கும் நோக்கில், தொழில் துவக்­கு­வ­தற்­கான நடை­மு­றை­களை சுல­ப­மாக்கி வரு­கி­றது.
அவற்றில் ஒன்­றாக, கம்­பெனி கள் சட்­டத்தின் கீழ், நிறு­வ­னங்­களை பதிவு செய்­வ­தற்­கான வழி­மு­றையை, ஒரே குடையின் கீழ், மத்­திய அரசு கொண்டு வந்­து உள்­ளது. இதற்­காக, மத்­திய நிறு­வன விவ­கா­ரங்கள் அமைச்­சகம், சி.ஆர்.சி., எனப்­படும், மத்­திய பதிவு மையம் என்ற அமைப்பை உரு­வாக்­கி­யுள்­ளது. இந்த அமைப்பு, வலை­தளம் வாயி­லாக வரும் அனைத்து விண்­ணப்­பங்­க­ளையும் பரி­சீ­லித்து, நிறு­வ­னங்­களை பதிவு செய்து தரும் பணியை மேற்­கொள்ளும். தற்­போது, நிறு­வ­னங்­களை பதிவு செய்யும் பணியை, கம்­பெ­னிகள் பதி­வாளர் அலு­வ­லகம் மேற்­கொண்டு வரு­கி­றது; இன்று முதல், இப்­ப­ணியை, சி.ஆர்.சி., மேற்­கொள்ள உள்­ளது.
புதிய நிறு­வ­னங்­களை துவக்க விரும்­புவோர், கம்­பெ­னிகள் பதிவு சட்­டத்தின் கீழ், உரிய தொகை­யுடன், வலை­தளம் வாயி­லாக மின்­னணு விண்­ணப்­பங்­களை – ஐ.என்.சி., 2, 7, 29; ஐ.என்.சி., 22, டி.ஐ.ஆர்., 12, யு.ஆர்.சி., 1 படி­வங்களை பூர்த்தி செய்து அனுப்­பலாம். அந்த விண்­ணப்­பங்­களை, சி.ஆர்.சி., பரி­சீ­லித்து, தகு­தி­யுள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு பதிவுச் சான்றிதழ் வழங்கும். அதே­ ச­மயம், நிறு­வ­னங்­களை பதிவு செய்­வ­தற்­காக பெறப்­படும் விண்­ணப்­பங்கள், கம்­பெ­னிகள் சட்ட விதி­முறை­களின்­படி உள்­ளதா; அதே பெயரில் வேறு நிறு­வ­னங்கள் செயல்­ப­டு­கின்­ற­னவா என்­பது உள்­ளிட்ட ஆய்­வு­களை ஆர்.ஓ.சி., மேற்­கொள்ளும். இதை­ய­டுத்து, ஆர்.ஓ.சி., அளிக்கும் பரிந்­து­ரையின் அடிப்­ப­டை­யி­லேயே, சி.ஆர்.சி., புதிய நிறு­வ­னங்­களை பதிவு செய்யும்.
இன்று முதல் அம­லுக்கு வரும் இந்த நடை­மு­றையால், ஒரு நிறு­வனம், கம்­பெ­னிகள் சட்­டத்தின் கீழ், உரிய விதி­மு­றை­களை பின்­பற்றி வலை­த­ளத்தில் விண்­ணப்­பித்தால், 24 மணி நேரத்தில் அது தொடர்­பான பரி­சீ­லனை முடி­வ­டைந்து, மறுநாள் பதிவு சான்­றிதழ் பெற்று விடலாம். ‘இப்­ப­ணிகள் விரை­வாக நடை­பெ­று­கின்­ற­னவா என்­பது நேர­டி­யாக மேற்­பார்­வை­யி­டப்­படும்’ என, நிறு­வன விவ­கா­ரங்கள் அமைச்­சகம் தெரி­வித்­துள்­ளது.
சர்­வ­தேச நடை­முறைஉலக நாடு­களில் தொழில் துவங்­கு­வ­தற்­கான நடை­முறைகள் எளி­மை­யாக உள்ளன. அதை பின்­பற்றி, மத்திய அரசு, சுல­ப­மாக தொழில் துவங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­றது. அதன்­படி, நாடு தழு­விய அளவில், ஒரே அமைப்பின் கீழ், மின்­னணு விண்­ணப்­பங்­களை பரி­சீ­லித்து, பதிவு செய்யும் நடை­மு­றை அம­லுக்கு வந்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)