பதிவு செய்த நாள்
01 ஏப்2016
07:40

புதுடில்லி : பிரபல, ‘ஸ்டார் இந்தியா’ குழுமத்தைச் சேர்ந்த, ‘ஹாட்ஸ்டார்’ நிறுவனம், மொபைல் போனில் கிரிக்கெட் போட்டி, திரைப்படங்கள், ‘டிவி’ தொடர்கள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. இந்தியாவில், கடந்த ஆண்டு, பிப்ரவரியில் அறிமுகமான ஹாட்ஸ்டார் சேவை அடுத்த சில மாதங்களில், வெளிநாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இது குறித்து, ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உதய் சங்கர் கூறியதாவது: சேவை துவங்கிய ஓராண்டிற்குள், ஐந்து கோடி பேர், ஹாட்ஸ்டார் ‘ஆப்’ஐ பதிவிறக்கி, பல்வேறு நிகழ்ச்சிகளை கண்டு ரசித்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற, புகழ் பெற்ற, ‘இங்லிஷ் பிரீமியர் லீக்’ கால்பந்து போட்டியை, ‘டிவி’யை விட, ஹாட்ஸ்டார் மூலம் பார்த்து ரசித்தவர்களே அதிகம். விரைவில், வெளிநாடுகளிலும், ஹாட்ஸ்டார் சேவை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|