பதிவு செய்த நாள்
01 ஏப்2016
07:41

புதுடில்லி : ‘‘நடப்பு நிதியாண்டில், ஜனவரி மாதம் வரை, கயிறு பொருட்கள் ஏற்றுமதி, 1,382 கோடி ரூபாயாக உள்ளது,’’ என, மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:சர்வதேச அளவில், நிதி நெருக்கடி நிலை காணப்பட்டாலும், இந்தியாவில், கயிறு பொருட்கள் துறை சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில், கடந்த ஜனவரி வரை, கயிறு பொருட்கள் ஏற்றுமதி, 1,382 கோடி ரூபாயாக உள்ளது. இது, முழு நிதியாண்டில், 1,630 கோடி ரூபாயாக இருக்கும். இதனால், நடப்பு நிதியாண்டில், கயிறு பொருட்கள் ஏற்றுமதி, கடந்த ஆண்டை விட அதிகமாகவே இருக்கும். கயிறு தொழிலை மேம்படுத்த, நவீன தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|