பதிவு செய்த நாள்
01 ஏப்2016
10:11

மும்பை : 2016-17ம் நிதியாண்டின் துவக்க நாளான இன்று இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன், தங்களின் புதுக்கணக்கை துவக்கி உள்ளன. ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சரிவு காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஏப்ரல் 1, காலை 9மணி நிலவரம்) சென்செக்ஸ் 79.75 புள்ளிகள் சரிந்து 25,262.11 புள்ளிகளாகவும், நிப்டி 30.05 புள்ளிகள் சரிந்து 7708.35 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தைகளை பொறுத்தவரை பார்தி ஏர்டெல், கெயில், ஹிண்டல்கோ, டாடா ஸ்டீல், எம் அண்ட் எம் போன்ற நிறுவன பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன. அதே சமயம், பிஹச்இஎல், விப்ரோ, கோல் இந்தியா, ஐடிசி, சிப்லா, ஏசியன் பெயின்ட்ஸ், ஹச்சிஎல் டெக் ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றம் பெற்றுள்ளன. நேற்றைய வர்த்தகத்தின் போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.4000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பங்குகளை வாங்கியதே பங்குச்சந்தைகளின் இன்றைய சரிவிற்கு காரணமாக கூறப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|