பதிவு செய்த நாள்
01 ஏப்2016
12:23

புதுடில்லி : கடந்த ஆண்டின் மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன், இந்திய மதிப்பில் சுமார் ரூ.31.3 லட்சம் கோடியாக இருந்தது எனவும், கடந்த டிசம்பர் மாத இறுதியில், இது மேலும் அதிகரித்து ரூ.31.6 லட்சம் கோடியாக அதிகரித்தது எனவும் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2015ம் ஆண்டின் டிசம்பர் மாத இறுதி நிலவரப்படி அரசு துறைகளின் வெளிநாட்டு கடன் 90.7 பில்லியன் டாலர்களாகவும், அரசு அல்லாத துறைகளின் வெளிநாட்டு கடன் 389.5 பில்லியன் டாலர்களாகவும் இருந்தது. நீண்ட கால வெளிநாட்டு கடன் தொகை 2.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே சமயம், குறுகிய கால வெளிநாட்டு மொத்த கடன் தொகை 4.6 சதவீதம் குறைந்துள்ளது.
நீண்ட கால கடன் மார்ச் மாத இறுதியில் 82 சதவீதமும், டிசம்பர் மாத இறுதியில் 83 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதிக அளவிலான வர்த்தக கடன் மற்றும் என்.ஆர்.ஐ.,களின் முதலீடுகள் ஆகியவற்றாலேயே துவக்கத்தில் நீண்ட கால வெளிநாட்டு கடன் அதிகரித்துள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|