பதிவு செய்த நாள்
01 ஏப்2016
14:10

புதுடில்லி:வெளிநாடு சென்று திரும்பும் சாதாரண விமான பயணிகள், இன்று முதல், சுங்கத்துறை படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. விமான பயணிகள் எடுத்துவரும் பொருட்களுக்கான சுங்கவரி விலக்கு, உச்சவரம்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.வெளிநாடுகளுக்கு சென்று திரும்பும் விமான பயணிகள் அனைவரும், சுங்கத்துறை படிவத்தை பூர்த்தி செய்து விமான நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். இதனால், பயணிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
இந்நிலையில், 'சுங்க வரி விதிக்கக் கூடிய பொருட்களை எடுத்து வராத பயணிகள், காத்திருந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை' என, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஏப்ரல், 1ம் தேதி, இன்று முதல், புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. இதேபோல், பல்வேறு நாடுகளில் இருந்து, பயணிகள் எடுத்து வரும் பொருட்களின் மதிப்புக்கான வரி விலக்கு உச்ச வரம்பும், இன்று முதல் உயர்த்தப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|