பதிவு செய்த நாள்
01 ஏப்2016
16:17

மும்பை : தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்துள்ளன. சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் எதிரொலியாக வாரத்தின் இறுதி வர்த்தக நாளாக இன்று இந்திய பங்குச்சந்தைகள் நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர இறுதியில் மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 72.22 புள்ளிகள் சரிந்து 25,269.64 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையான நிப்டி 25.35 புள்ளிகள் சரிந்து 7713.05 புள்ளிகளாகவும் இருந்தன.
பங்குகளை பொருத்தவரை டிசிஎஸ், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், ஓன்ஜிசி உள்ளிட்ட பங்குகள் 1 முதல் 4 சதவீதம் வரை சரிவை சந்தித்தன. அதே சமயம் ஐடிசி, என் அண்ட் டி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, பிஹச்இஎல் போன்ற நிறுவனங்களின் பங்குகள் 1 முதல் 3 சதவீதம் வரை லாபம் ஈட்டின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|