கோவையில் உபர் ஆட்டோ குறைந்­த­பட்ச செலவில் பயணம்கோவையில் உபர் ஆட்டோ குறைந்­த­பட்ச செலவில் பயணம் ... ஐரோப்­பிய கூட்­ட­மைப்பு வங்கி 51 கோடி அமெ­ரிக்க டாலர் உதவி ஐரோப்­பிய கூட்­ட­மைப்பு வங்கி 51 கோடி அமெ­ரிக்க டாலர் உதவி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கடந்த 2015 – 16ம் நிதி­யாண்டில் கார் விற்­பனை விர்ர்ர்ர்ர்ர்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2016
07:08

புது­டில்லி:கடந்த மார்ச் மாதத்­துடன் முடிந்த, 2015 – 16ம் நிதி­யாண்டில், கார் விற்­பனை, முந்­தைய நிதி­யாண்டை விட, சிறப்­பான வளர்ச்சி கண்­டுள்­ளது.ஒரு டஜ­னுக்கும் அதி­க­மான புதிய கார்­களின் அறி­மு­கமும், பரா­ம­ரிப்பு செலவு குறைவும், இந்த வளர்ச்­சிக்கு துணை புரிந்­துள்­ளது. இருந்­த­போ­திலும், பல்­வேறு கார­ணங்­களால், கடந்த நிதி­யாண்டில், சில கார் நிறு­வ­னங்­களின் விற்­பனை, முந்­தைய நிதி­யாண்டை விட குறைந்­துள்­ளது.கடந்த, 2015 – 16ம் நிதி­யாண்டில் பல­வகை கார்­களின் விற்­பனை, 7 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 27.80 லட்­ச­மாக உயர்ந்­துள்­ளது. முந்­தைய, 2014 – 15ம் நிதி­யாண்டில், கார் விற்­பனை, 3.9 சத­வீதம் வளர்ச்சி அடைந்து, 26 லட்­ச­மாக இருந்­தது. தொடர்ந்து, இரண்டு நிதி­யாண்­டு­க­ளாக, கார் விற்­பனை அதி­க­ரித்து வரு­கி­றது. இதற்கு, புதிய கார்­களின் அறி­முகம், கச்சா எண்ணெய் விலை குறைவு உள்­ளிட்ட பல அம்­சங்கள் துணை புரிந்­துள்­ளன. கடந்த நிதி­யாண்டில், மாருதி சுசூகி நிறு­வ­னத்தின் விற்­பனை அதி­க­ரிக்க, ‘பலேனோ, பிரஸ்ஸா’ போன்ற புதிய கார்­களும், ‘சியாஸ்’ போன்ற புழக்­கத்தில் உள்ள மாடல்­களும் குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பை வழங்­கி உள்­ளன.அது­போல, ஹுண்டாய் நிறு­வ­னத்தின் விற்­பனை உயர, புதிய, ‘கிரெட்டா’ கார் மற்றும் ‘எலைட் ஐ20, கிராண்டு ஐ10’ கார்கள் உத­வி­யுள்­ளன. மகிந்­திரா அண்டு மகிந்­திரா நிறு­வ­னத்­திற்கு, ‘டி.யு.வி., 300, கே.யு.வி., 100 போன்ற புதிய கார்கள் கைகொ­டுத்­துள்­ளன. ரெனால்ட் நிறு­வ­னத்தின் விற்­பனை உயர, புதிய ‘க்விட்’ கார் உத­வி­உள்­ளது.அதே­ச­மயம், டாடா மோட்டார்ஸ், டொயோட்டா உள்­ளிட்ட ஒரு சில நிறு­வ­னங்­களின் விற்­பனை வளர்ச்சி குறைந்துஉள்­ளது.
இது தொட­ருமா? கடந்த நிதி­யாண்டில், கார் நிறு­வ­னங்கள் கண்ட வளர்ச்சி, நடப்பு, 2016 – 17ம் நிதி­யாண்­டிலும் தொட­ருமா என, உறு­தி­யாக கூற முடி­யாது என, வல்­லு­னர்கள் தெரி­வித்­துள்­ளனர். அதற்­கான கார­ணங்கள்:மத்­திய அரசு, 1 – 2.5 சத­வீதம், அடிப்­படை கட்­ட­மைப்­புக்கு கூடுதல் வரி விதித்­ததால், கடந்த ஜன­வ­ரியில், பல நிறு­வ­னங்கள், கார் விலையை உயர்த்­தின. சாதா­ரண கார்­களின் விலை அதிகம் உய­ர­வில்லை என்ற போதிலும், ஆடம்­பர கார்­களின் விலை அதி­க­ளவு உயர்த்­தப்­பட்­டுள்­ளது. இது, கார்­களின் மொத்த விற்­ப­னையை பாதிக்கும்.கடந்த ஓராண்­டிற்கும் மேலாக குறைந்து வந்த கச்சா எண்ணெய் விலை, மீண்டும் உயரத் துவங்­கி­யுள்­ளது. இது, நடுத்­தர வர்க்­கத்­தி­னரின் கார் வாங்கும் ஆசைக்கு அணை­போடும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)