பதிவு செய்த நாள்
07 ஏப்2016
05:35
புதுடில்லி : பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, ஏர்பிரான்ஸ் – கே.எல்.எம்., நிறுவனம், சர்வதேச விமான சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், தகவல் தொடர்பு சார்ந்த சேவைகளுக்காக, டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு, பல லட்சம் டாலர் மதிப்புள்ள, ‘ஆர்டர்’ வழங்கியுள்ளது. இதன்படி, ஏர்பிரான்ஸ் – கே.எல்.எம்., விமான சேவைக்கு தேவையான, தொலைதொடர்பு ஒருங்கிணைப்பு வசதியை, டாடா கம்யூனிகேஷன்ஸ் ஏற்படுத்தி தரும். விமான பயணிகளுக்கு, மேம்பட்ட தொழில்நுட்பத்தில், தொலைதொடர்பு வசதியை வழங்க, ஏர்பிரான்ஸ் – கே.எல்.எம். நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, விமான பயணிகளின், ‘ஸ்மார்ட் வாட்ச்’ல், பயண விவரங்கள் அடங்கிய ‘ஆப்’ சேவை வழங்கப்பட உள்ளது. இதுபோன்ற சேவைக்கு, டாடா டெலி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின், தொலைதொடர்பு ஒருங்கிணைப்பு வசதி அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|