வீடி­யோகான் மொபைல் போன் விற்­ப­னையை அதி­க­ரிக்க முடிவுவீடி­யோகான் மொபைல் போன் விற்­ப­னையை அதி­க­ரிக்க முடிவு ... பிளாட்­டினம் நகை­க­ளுக்கு வர­வேற்பு 24 சத­வீதம் உயர்வு பிளாட்­டினம் நகை­க­ளுக்கு வர­வேற்பு 24 சத­வீதம் உயர்வு ...
வர்த்தகம் » ஜவுளி
வேலை­வாய்ப்பு வைட் காலரை விட ‘புளு காலர்’ பணி­களில் அதிக ஊதியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2016
04:43

புது­டில்லி:இந்­தி­யாவில் இன்­ஜி­னியர், எம்.பி.ஏ., பட்­ட­தா­ரி­களை விட, வாகனம், ஜவுளி உள்­ளிட்ட துறை­களில் தொழிற்­கல்வி பயின்­றோ­ருக்கு அதிக வேலை­வாய்ப்பும், கூடுதல் ஊதி­யமும் கிடைப்­ப­தாக, ‘டீம்லீஸ் சர்­வீசஸ்’ நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
பொறி­யியல் மற்றும் எம்.பி.ஏ., படித்­தோ­ருக்­கான பணிகள், ‘வைட் காலர் ஜாப்ஸ்’ எனப்­ப­டு­கின்­றன. இப்­பி­ரிவில் பெரும்­பா­லானோர், சட்டை கசங்­காமல், அழுக்கு ஆகாமல், ‘ஏசி’ அறை­களில் பணி­யாற்­றுவர்.
தொழிற்­கல்வி படித்­தோ­ருக்­கான பணிகள், ‘புளு காலர் ஜாப்ஸ்’ என்­ற­ழைக்­கப்­ப­டு­கின்­றன. இப்­பி­ரிவில், பெரும்­பா­லா­னோரின் பணிகள், உட­லு­ழைப்பு சார்ந்­தவை. இவர்கள், வாகனம், உணவு, ஆடைகள் தயா­ரிப்பு, அழகுக் கலை போன்ற துறை­களில், திறன் சார்ந்த பணி­களை மேற்­கொள்­கின்­றனர்.
இத்­த­கையோர், பொறி­யியல் பட்­ட­தா­ரி­களை விட, 10 – 27 சத­வீதம் கூடுதல் ஊதியம் வாங்­கு­கின்­றனர். ஒரு சில பிரி­வினர், எம்.பி.ஏ., பட்­ட­தா­ரி­க­ளுக்கு நிக­ரான ஊதியம் பெறு­கின்­றனர். ‘‘இதில் இருந்து, இந்­தி­யாவில் திறன் சார்ந்த பணி­யா­ளர்­க­ளுக்கு தேவை அதி­க­ரித்து வரு­வதைப் புரிந்து கொள்­ளலாம். அது­மட்­டு­மின்றி, அவர்­களின் ஊதிய வளர்ச்­சியும், பொறி­யா­ளர்­களை விட அதி­க­மாக உள்­ளது. இது, திறன் சார்ந்த தொழில்­களில், ஊழி­யர்­க­ளுக்கு உள்ள பற்­றாக்­கு­றையை காட்­டு­கி­றது,’’ என, டீம்லீஸ் சர்­வீசஸ் நிறு­வ­னத்தின் மூத்த துணை தலைவர் ரிது­பர்னா சக்­ர­வர்த்தி தெரி­வித்­துள்ளார்.
இந்­நி­று­வனம், வாகனம், வங்கி, காப்­பீடு, மின்­னணு, உணவு பதப்­ப­டுத்­துதல், நவ­ரத்­தி­னங்கள் மற்றும் ஆப­ர­ணங்கள், ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு, சரக்கு போக்­கு­வ­ரத்து, சில்­லரை விற்­பனை, சுற்­றுலா உள்­ளிட்ட, 12 துறை­களில் ஆய்வு மேற்­கொண்­டது. அதில், பொறி­யா­ளர்­களை விட, தொழிற்­கல்வி ஊழி­யர்­க­ளுக்கு அதிக ஊதியம் வழங்­கு­வதில், வாகன துறை முத­லி­டத்தில் இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.
பொறி­யியல் பட்­ட­தா­ரி­களின் எண்­ணிக்கை, தேவைக்கு அதி­க­மாக, இரு மடங்கு பெருகி உள்­ளது. தர­மற்ற கல்­வியால், வேலை­யில்லா பட்­ட­தா­ரி­களின் எண்­ணிக்­கையும் அதி­க­ரித்து வரு­கி­றது.
அதே­ச­மயம், தொழிற்­கல்வி பயில்வோர், எண்­ணிக்கை அதி­க­ரிக்­காமல், நிலை­யாக உள்­ளது. இது, தொழிற்­கல்வி சார்ந்த பணி­க­ளுக்கு ஆள் பற்­றாக்­கு­றையை ஏற்­ப­டுத்தி, ஊதிய உயர்­வுக்கு வழி­கோ­லு­கி­றது என, ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)