பதிவு செய்த நாள்
10 ஏப்2016
23:25
புதுடில்லி : வலைதள நிறுவனமான, ஹவுசிங் டாட் காம், வீடுகள் விற்பனை, வாடகை ஆகியவற்றுக்கு, தகவல் சேவை மையமாக செயல்பட்டு வருகிறது. கடந்த, 2012ல் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் வலைதளத்தில், வீடு வாங்க, விற்க, வாடகை உள்ளிட்ட தேவைகளுக்கு பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி, இந்த வலைதளத்தில், 17 லட்சம் வீடுகளின் பட்டியல் இடம் பெற்றுள்ளது. விற்போர், வாங்குவோர் இடையிலான பாலமாகச் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், நடப்பு நிதியாண்டில் விளம்பரத்திற்காக, 50 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிட்டு உள்ளது. இந்நிறுவனத்தின் முதல், ‘டிவி’ விளம்பரம், சில தினங்களுக்கு முன், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியின்போது வெளியிடப்பட்டது. சமூக வலைதளங்கள், மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றிலும், இந்நிறுவனம் விளம்பரங்களை வெளியிட்டு, வீட்டுவசதி துறையில் தனி இடம் பிடிக்க திட்டமிட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|