பதிவு செய்த நாள்
10 ஏப்2016
23:31

அகமதாபாத் : முதலீட்டு நிறுவனமான ஆவிஷ்கார், முதன்முதலாக, இலங்கையில் முதலீடு செய்கிறது. இலங்கையைச் சேர்ந்த ‘எம்.ஏ’ஸ் புட்ஸ் நிறுவனத்தில், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் முதலீடு செய்துவரும் ஆவிஷ்கார் நிறுவனம், முதலீடு செய்கிறது. முதலீட்டின் அளவு, 2.1 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.இந்த முதலீட்டை, ‘எம்.ஏ’ஸ் நிறுவனம், தன் வளர்ச்சிப் பணிகளுக்காகவும், விரிவாக்கத்துக்காகவும் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறது. குறிப்பாக, இலங்கையின் வட பகுதியில், தன் தொழிலை விரிவாக்க, இந்த நிதி முதலீட்டை பயன்படுத்த முடிவு செய்திருக்கிறது, எம்.ஏ’ஸ் நிறுவனம்.1986ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட, ‘எம்.ஏ’ஸ் நிறுவனம், இலங்கையில் எம்.ஏ’ஸ் கிச்சன், ஹேப்பி ஹோம், டாட்’ஸ் கார்டன், பாஸ்டா ரோமா ஆகிய பிராண்டுகளில், உணவு தயாரிப்பு துறையில் இயங்கி வருகிறது.இந்நிறுவனம், குடும்ப நபர்களால் நிர்வகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|