பதிவு செய்த நாள்
11 ஏப்2016
01:10

மும்பை : ருபே கார்டை, ‘கான்டாக்ட்லெஸ்’ கார்டு ஆக மாற்றுவதற்கான முயற்சி ஆரம்பமாகியுள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் அந்த முயற்சி நடைமுறைக்கு வரும் என தெரிகிறது.ஒரு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள், இன்னொரு வங்கியின் ஏ.டி.எம்., மூலம் பணம் எடுக்கும் வசதியை செய்து கொடுக்கும் தொழில்நுட்பத்தை செயல்படுத்துவது, ‘நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ (என்.பி.சி.ஐ.,) நிறுவனம். இதன் மூலமாக வழங்கப்படுவது தான் ருபே கார்டுகள். இந்த ருபே கார்டுகளை கான்டாக்ட்லெஸ் கார்டுகளாக மாற்றும் முயற்சியில் இந்நிறுவனம் இறங்கி உள்ளது. கான்டாக்ட்லெஸ் கார்டுகளை, மிஷினில் தேய்க்க வேண்டிய தேவை இருக்காது. அதற்குப் பதிலாக அந்த கார்டுகள் மிஷினால் ஸ்கேன் செய்யப்படும்.தற்போது இந்தியாவில், 250 மில்லியன் ருபே கார்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதில் பிரதமரின், ‘ஜன் தன் யோஜனா’ மூலமாக மட்டும், 170 மில்லியன் கார்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|