பதிவு செய்த நாள்
11 ஏப்2016
01:13

புதுடில்லி : மத்திய அரசு, 'காம்ப்ளக்ஸ்' உரங்களுக்கான மானியத்தை, 25 - 30 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது.
இது, இவ்வகை உரங்களை தயாரிக்கும் கோரமண்டல் இன்டர்நேஷனல், தீபக் பெர்டிலைசர்ஸ் போன்ற நிறுவனங்களின் லாப வரம்பை பாதிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு மானியத்தை குறைக்கும் பட்சத்தில், இந்நிறுவனங்கள், காம்ப்ளக்ஸ் உரத்திற்கான சந்தை விலையை உயர்த்தும். ஏற்கனவே, யூரியாவை விட ஊட்டச்சத்து மிக்க காம்ப்ளக்ஸ் உரங்களின் விலை உயர்வாக உள்ளது. அது மேலும் அதிகரிக்கப்பட்டால், விவசாயிகள், யூரியாவை நாடுவது அதிகரிக்கும்.
இதனால், காம்ப்ளக்ஸ் உரங்களின் விற்பனை குறையும். ஏற்கனவே, உர நிறுவனங்களிடம் காம்ப்ளக்ஸ் உரம் மற்றும் டி.ஏ.பி., கையிருப்பு, 45 லட்சம் டன் என்ற அளவில் தேவையை விட அதிகமாக உள்ளது. அதனால், உரம் தயாரிக்கும் நிறுவனங்கள், காம்ப்ளக்ஸ் உரங்களின் விற்பனையை உயர்த்த சலுகைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற காரணங்களால், காம்ப்ளக்ஸ் உரம் தயாரிக்கும் நிறுவனங்களின் லாப வரம்பு குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், உர மானிய குறைப்பால், மத்திய அரசுக்கு, 4,500 - 5,000 கோடி ரூபாய் மிச்சமாகும். மத்திய அரசின் உர மானியம், நடப்பு 2016 - 17ம் நிதியாண்டில், 30 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|